பக்கம்:Siva Temple Architecture etc..pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

வடக்குபுறம் காளியின் உருவமும் சாதாரணமாக அமைக்கப்பட்டிருக்கும்; சில கோயில்களில் காளிக்கு பதிலாக மஹாவிஷ்ணுவாவது அல்லது பிரம்மாவாவது அமைக்கப்பட்டிருக்கும். கர்ப்பக்கிரஹத்திற்கு வெளியில் வடக்குப் பக்கம் சண்டேஸ்வரர் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். கர்ப்பக்கிரஹத்தின் வடக்குப்பக்கம், அபிஷேக தீர்த்தம் வெளியே போவதற்காக கோமுகம் அமைக்கப்பட்டிருக்கும்.

சில பெரிய கோயில்களில் ஐந்து பிராகாரங்கள் உண்டு அப்படிப்பட்ட கோயில்களில் ஒவ்வொரு பிராகாரத்திற்கும் கோபுரங்கள் இருக்கலாம். பெரிய கோயில்களில் வாகன மண்டபம் கடைசி வெளிப்பிராகாரத்தில் கட்டப்பட்டிருக்கும்; அன்றியும் உற்சவமூர்த்தியின் வாகனங்களை வைப்பதற்காக வெளிப்பிராகாரத்தில் சிறு அறைகள் அமைக்கப்பட்டிருக்கும். உற்சவமூர்த்தியும் அறுபத்து மூவர் முதலியவர்களுடைய விக்ரஹங்களும் கோயிலின் உட்பிராகாரத்தில் வைக்க இடம் ஏற்பாடு செய்திருக்கும்.

பெரிய கோயில்களில் சூரியன், சந்திரன், பைரவர், மஹாலட்சுமி, சரஸ்வதி முதலிய பரிவார தேவதைகளுக்கும் இடம் உண்டு.

என் அபிப்பிராயம், இடைக்காலத்து பெரிய சிவாலயங்களில் மஹாவிஷ்ணுவுக்கு பிரத்யேகமாக சந்நிதி யிருந்ததென்பதாம்; அவற்றுள் சில பிறகு அப்புறப்படுத்தப்பட்டன. ஆயினும் சில சிவாலயங்களில் தற்காலமும் விஷ்ணு சந்நிதிகள் உண்டென்பதை இதை வாசிக்கும் சிவநேயர்கள் ஒப்புக்கொள்வார்கள். இதற்கு உதாரணமாக பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதியையும், சிதம்பரம் நடராஜர் கோயிலில், கோவிந்தராஜர் சந்நிதியையும் கூறலாம். மதுராபுரியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலிருந்த பெருமாள் சந்நிதியும், திருவையாற்றில் பஞ்சனதேஸ்வரர் கோயிலிலிருந்த பெருமாள் சந்நிதியும் அப்புறப்படுத்தப்பட்டனவென்பது சரித்திரமறிந்த விஷயமே.

தென் இந்தியாவில் பல சிவாலயங்களில் கள்ள அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன வென்பது பலர் அறிந்த விஷயமே; இந்த இரகசியமான அறைகள், சாதாரணமாகப்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/21&oldid=1293888" இலிருந்து மீள்விக்கப்பட்டது