பக்கம்:Siva Temple Architecture etc..pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


திராவிட சிவாலயப் பிரிவுகள்

திராவிட சில்ப கோயில்களை அடியிற்கண்ட முக்கிய பிரிவுகளாகக் கருதலாம். (1) பல்லவ ஆலயங்கள் (2) பூர்வீக சோழ கோயில்கள் (3) பிற்காலத்திய சோழக் கோயில்கள் (4) விஜயநகர சில்ப கோயில்கள் (5) சளுக்கிய அல்லது ஹொய்சால் சில்பக் கோயில்கள்.

(1) முதலாவது பல்லவ கோயில்களை எடுத்துக்கொள்வோம். இவைகளை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம் ; குகைக் கோயில்கள், பெரிய கற்பாறைகளில் வெட்டப்பட்ட கோயில்கள், துண்டிக்கப்பட்ட கருங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட ஆலயங்கள்.

குகைக்கோயில்கள் : - பல்லவ குகைக் கோயில்களுக்கு உதாரணமாக, மாபலிபுரத்திலுள்ள மஹிஷாசுர மர்த்தினி மண்டபத்தின் பக்கத்திலுள்ள சிவாலயத்தையும், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலிலிருந்து இறங்கிவரும்போது மலைப்பாறையில் வெட்டப்பட்ட சிவாலயத்தையும், திருச்சிராப்பள்ளி குகைக் கோயில்களையும் கூறலாம். இவைகளுக்கெல்லாம் குடவரைக் கோயில்கள் என்று பெயர் ; கற்பாறைகளில் குடைந்து எடுக்கப்பட்ட கோயில்கள் என்று பொருள்படும்.

வெட்டப்பட்ட கோயில்கள்: - பெரிய கற்பாறைகளைச் செதுக்கி கோயில்களாக சமைக்கப்பட்ட ஆலயங்களுக்கு உதாரணமாக, மஹாபலிபுரத்திலுள்ள ரதக் கோயில்களையும், எல்லோராவிலுள்ள கைலாசக் கோயிலையும் கூறலாம். இவைகள் ஒரே கற்பாறையிலிருந்தோ, குன்றிலிருந்தோ, மேலே இருந்து செதுக்கிக் கொண்டுவந்து, நிர்மாணிக்கப் பட்ட கோயில்களாம்.

கட்டப்பட்ட கோயில்கள் :-துண்டுகளாக வெட்டப்பட்ட கருங்கற்களை அடுக்கிக் கட்டிய பல்லவ ஆலயங்களுக்கு உதாரணமாக, காஞ்சீபுரம் கைலாச நாதர் கோயில், மஹாபலிபுரம் கடற்கரைக் கோயில் முதலியவற்றைக் கூறலாம். பூர்வ காலத்தில் கட்டப்ப்ட்ட சிவாலயங்கள் இப்படிப்பட்டவைகளே.

இவைகளின் சிற்பங்களைப்பற்றி சிறிது ஆராய்வோம். குகைக் கோயில்களில் விமானங்கள் கிடையா; வெட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/23&oldid=1294656" இலிருந்து மீள்விக்கப்பட்டது