பக்கம்:Siva Temple Architecture etc..pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

டத்தின் மேல்பாகம் மண்டபத்தைப்போல ஆகிறது. இக் காலத்தில் கும்ப பஞ்சரங்கள் சில்பிக்கப்பட்டன. 12-ஆம் நூற்றாண்டுமுதல் நாகபந்தம் செதுக்கப்பட்டது; அன்றியும், போதிகைகளில் 'இதழ்க'ள் செதுக்கப்பட்டன. கோயில்களில் பெரிய குளங்களும் அவைகளைச் சுற்றி தூண்கள் நிறைந்த மண்டபங்களும் கட்டப்பட்டன. இவைகளுக்கு உதாரணமாக, சிதம்பரம், திருவண்ணாமலை, ஜம்புகேஸ்வரம் கோயில்களின் சிற்பங்களைக் கூறலாம்.

மாடக்கோயில்கள் - இக்காலத்தில் மாடக்கோயில்கள் என்று சொல்லப்பட்ட சில சிவாலயங்கள் கட்டப்பட்டன; அவைகளை முதன்முதல் கட்டியவன் கோச்செங்கணான் எனும் சோழ அரசன், அவன் தன்காலத்தில் 64 மாடக் கோயில்கள் கட்டியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இவைகள் எல்லாம் சோழ சில்ப மமைந்தவைகளே. இவைகள் மாடங்களையுடைய கோயில்களாம்; ஆயினும் குறுகிய வாசற்படிகளை உடையவை; யானை நுழையக்கூடாத கட்டிடங்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் அகராதியில் மாடக்கோயில் எனும் பதத்திற்கு "மேட்டிடங்களில் குறுகிய வழியுள்ளதாக, கோச்செங்கண்ணனால் கட்டப்பட்டவைகள்” என்று அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது.

விஜய நகரச் சில்ப சிவாலயங்கள்

இவைகளின் காலம் சுமார் 1350 முதல் 1600 வரையில் எனக் கூறலாம். இக்காலத்திய சிவாலயங்கள் பெரும்பாலும், மிகவும் உன்னதமான கோபுரங்களை உடையவை; மிகவும் பெரிய கோபுரங்கள் 15-ஆம் ஆண்டுமுதல் 17-ஆம் ஆண்டுவரையில் கட்டப்பட்டன. இக்காலத்தில்தான் நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண்டபங்களும் கட்டப்பட்ட்ன ; இதற்கு உதாரணமாக மதுரை சிதம்பரம் திருநெல்வேலி கோயில்களைக் கூறலாம். கோபுரங்களில் (முன்பிருந்த துவாரபாலகர்களுடன்) பல உருவங்கள் சித்திரிக்கப்பட்டன. தூண்களில் தாமரைப்பூ போதிகைகள், வாழைப்பூ உள்ள போதிகைகளாக மாற்றப்பட்டன. பெரிய ஸ்தங்பங்களில் குதிரை வீரர்களுடைய உருவங்கள் வெட்டப்பட்டன, கோயில், அடிமட்டத்தில் கோலாட்டம்போடும் ஸ்திரீகளின் உருவங்கள் வெட்டப்பட்டன; இதற்கு உதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/27&oldid=1293934" இலிருந்து மீள்விக்கப்பட்டது