பக்கம்:Siva Temple Architecture etc..pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ரணமாக ஹம்பியிலுள்ள விரூபாட்சர் கோயிலைக் காண்க, போதிகைகளில் மணிபோன்ற சில்பும், புஷ்பம்போல் மாறியது. அன்றியும் இக்காலத்து கோயில்களில் கல்யாண மண்டபங்கள் எனும் அழகிய மண்டபங்கள் கட்டப்பட்டன; இதற்கு உதாரணமாக, ராயவேலூர் கல்யாண மண்டபத்தைக் காண்க. தூண்கள் மூன்று பிரிவினை உடையவைகளாயின ; அம்மனுக்கு கோயில்களில் பிரத்தியேகமான சந்நிதி இக்காலத்தில்தான் உண்டானதென்று மைசூர் சர்வகலாசாலைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணா அவர்கள் அபிப்பிராயப்படுகிறார். போதிகைகளில் 'நாணுதல்' சில்பிக்கப்பட்டது. அன்றியும் "அணிவெட்டுக்கால்;" தூண்கள் உண்டாக்கப்பட்டன. இதற்கு உதாரணமாக தாட்பத்ரி கோயிலைக் கூறலாம்.

கடம்ப சில்பக் கோயில்கள்

இவைகள் திராவிட சில்பக் கோயில்களின் ஓர் பகுதியாம். இக் கோயில்கள் சதுர வடிவமான சிகரங்களையுடையவை. சாதாரணமாக திராவிட சில்ப சிகரங்கள் 8 பக்கங்களுடையவைகளா யிருக்கும்

ஹேமாத்பன்ட் கட்டிடங்கள்

இந்த சிவாலயங்களும் திராவிட சில்பமமைந்த கட்டிடங்களே ; ஆயினும் இவைகள், பெரிய கருங்கற்பாறைகளைத் துண்டுகளாக வெட்டி அல்லது செதுக்கி, ஒன்றின் பேரில் ஒன்றாய் அடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள்; கற்களுக் கிடையில், சுதையோ அல்லது சிமென்ட்போன்ற வஸ்துவோ கிடையாது. இப்படிப்பட்ட கோயில்கள் ஒரு ராஷ்டிர கூடத்து அரசனது மந்திரியாகிய "ஹேமாத்பன்ட் என்பவரால் முதலில் கட்டப்பட்டபடியால் ஹேமாத்பன்ட் கட்டிடங்கள் எனும் பெயர்பெற்றன. இவரது காலம் 14 - ஆம் நூற்றாண்டிற்கு முன் பகுதியாம்.

கேரள சில்பக் கோயில்கள்

இவைகள் ஒருவிதத்தில் பர்மா சீனா, முதலிய இடங்களிலுள்ள கோயில்களைப்போன்ற சில்பமுடையவை. பெரும்பாலும் அஸ்திவாரம் கருங்கல்லாலாயதா யிருந்த போதிலும், மேல் கட்டிடமெல்லாம் மரத்தாலானவை. கோயில்கள் கூரைகளை உடையன. இவற்றிற்கு இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/28&oldid=1293937" இலிருந்து மீள்விக்கப்பட்டது