பக்கம்:Siva Temple Architecture etc..pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பட்டனவென்றும், பிறகு பிரம்மாவுக்கு கோயில்கள் அற்றுப்போய், சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும், மிகுதியாயின என்று எண்ண இடமுண்டு.

சளுக்கிய சில்பத்தில் ஒரு முக்கியமான அம்சம் மிகவும் அழகிய தூண்கள்; எல்லாத் தூண்களும் ஒரு மாதிரியாக செதுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஜதையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; இவைகள் சாணையில் கடைசல் பிடிக்கப்பட்டவைபோல் மெருகு உடையவைகளா யிருக்கும்; மிகவும் அருமையான வேலைப்பாடுடையவை; பெரும்பாலும் ஓர்வித கருப்புக் கல்லால் செய்யப்பட்டவை. மைசூர் ராஜ்யத்திலுள்ள சளுக்கிய கோயில்களெல்லாம் இப்படிப்பட்ட கருப்புக் கற்களால் ஆனவை என்றே கூறலாம்.

கோயிலுக்குள்ளே காற்று புகுவதற்காக பல கண்களையுடைய பலகணிகள் அமைக்கப்பட்டிருக்கும்; இவைகள் மிகவும் அருமையான வேலைப்பாடுடையவை.

இப்பிரிவு கோயில்களின் கோஷ்டங்களில் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

கர்ப்பக் கிரஹங்களில் அதிக சித்திர வேலைப்பாடுண்டு; பல வரிசைகளாக சில்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும்; கீழே யானைகள் வரிசை, அதற்குமேல் சிம்மங்கள் அல்லது சார்தூலங்களின் வரிசை, (புலிகள் வரிசை) அதற்குமேல் கொடிவேலை வரிசை அதற்குமேல் குதிரை வீரர்கள் வரிசை, அதற்குமேல் கொடி வேலப்பாடு ; அதற்குமேல் ராமாயணம் முதலிய புராணக் கதைகளின் சில்ப வரிசை, அதன்மீது ஹம்சங்கள் முதலிய பட்சிகளுடைய வரிசை; அதற்குமேல், தேவர்கள் கந்தர்வர்கள் அப்சரசுகள் வரிசை; இவைகளில், சிவ உருவங்கள் வைணவ உருவங்கள் எனும் பேதமின்றி, எல்லாத் தேவதைகளின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன; கூத்தாடு வினாயகர், நிர்த்த சரஸ்வதி முதலிய அபூர்வ சிலைகளு மிருக்கின்றன. தற்காலத்து சில்பிகள் ஏதாவது அபூர்வவான உருவங்களை நிர்மாணிக்க வேண்டுமென்றால், இப்படிப்ப்ட்ட கோயில்களுக்குத்தான் போய்க் கற்றுக்கொள்கின்றனர். இச் சில்பத்தைப்பற்றி டாக்டர் சர் பெர்கூசன் என்பவர் மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். 3 அடி சதுரத்திற்குள் இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/30&oldid=1293941" இலிருந்து மீள்விக்கப்பட்டது