பக்கம்:Siva Temple Architecture etc..pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

படிப்பட்ட அருமையான வேலைப்பாடுள்ள சில்பமே உலகெங்கும் கிடையாதெனக் கூறியுளார். இந்த நுட்பமான் அழகிய வேலைப்பாட்டுக்கு ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கெடுத்து எழுதுகிறேன். மைசூரிலுள்ள ஒரு சளுக்கிய சில்பக் கோயிலில், ஒரு பெண்மணி கையில் பழம் வைத்துக்கொண் டிருப்பதுபோலும், அந்தப் பழத்தினமீது ஒரு ஈ உட்கார்ந்திருப்பதுபோலும் தத்ரூபமாய் செதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஈயின் இறகுகளையும் ஸ்பஷ்டமாகக் காணலாம்! இவைகளெல்லாம் வெட்டப்பட்டபொழுது ஒரு வித நீல நிறமாயிருந்து பிறகு கருப்பாக மாறும் கற்களால் ஆனவை என்று கூறப்பட்டிருக்கிறது.

ஹொய்சல கோயில்களில் சாதாரணமாக அம்மன் சந்நிதியே கிடையாதென்று கூறலாம். இக்கோயில்களில் சாதாரணமாக ஹொய்சல அரசர்களுடைய விருது செதுக்கப்பட்டிருக்கும்; இந்தப் பிருது என்னவென்றால், ஓர் வீரன் ஓர் சார்தூலத்தைத் தனியாக எதிர்த்து தன் வாளால் கொல்வதுபோலிருக்கும். சளுக்கிய வம்சத்து ஆதி புருஷன் ஒருவன் இத்தகைய வீரச்செயல் செய்ததாக சரித்திரம்.

இச் சில்பக் கோயில்களுக்கு உதாரணமாக, மைசூர் ராஜ்யத்தில் ஹலபேட் எனும் ஊரிலுள்ள கேதாரேஸ்வரர் கோயிலையும், ஹொய்சலேஸ்வரர் கோயிலையும் கூறலாம்.

தற்காலத்திய கோயில்களின் சில்பம்-சுமார் 1600 முதல்

இவைகளில் விசாலமான மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கும்; பல பிரதட்சிண பிராகாரங்கள் அமைக்கப்பட்டவைகளா யிருக்கும். தூண்களிலுள்ள போதிகைகளின் தொங்கட்டங்கள், வாழைப்பூவைப்போல முற்றிலும் மாறிவிட்டன. கோபுரங்கள் நிரம்ப பல உருவங்கள் சுதை (சுண்ணாம்பு)யினால் நிர்மாணிக்கப்பட்டன். தூண்கள் மூன்று பிரிவினை உடையவைகளா யிருக்கும்; அன்றியும் நாணுதல் அமைக்கப்பட்டவைகளாயிருக்கும். மண்டபங்களின் மேற் கூரைகளில் சில கும்பாகிருதியாக (Dome like) அமைக்கப்பட்டன.

இதற்கு உதாரணமாக புதுப்பிக்கப்பட்ட திருப்பாதிரிப்புலியூர் சிவாலயத்தையும், ராமேஸ்வரத்து சொக்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/31&oldid=1293952" இலிருந்து மீள்விக்கப்பட்டது