பக்கம்:Siva Temple Architecture etc..pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டான் மண்டபத்தையும், மதுரை புது மண்டபத்தையும், கோபுரங்களையும், திருச்செந்தூரிலுள்ள ஷண்முகவிலாச மண்டபத்தையும் கூறலாம்.

இக்காலத்துக் கோபுரங்கள் பல வர்ணம் தீட்டப் பட்டவைகளாயிருக்கும்; ஆதிகாலத்து கோபுரங்களில் அப்படி கிடையாது.

ஆதிகாலத்து கோயில்களிலிருந்த சிலை உருவங்கள் இயற்கைக்கு மிகவும் ஒத்தவைகளா யிருந்தனவென்றும், தற்காலத்தில் கட்டப்படும் கோயில்களிலுள்ள உருவங்கள் அப்படி யில்லையென்றும் பெர்கூசன் முதலியோர் அபிப்பிராயப் படுகின்லனர்.

பஞ்சாயதனக் கோயில்கள்

இவைகள் புதிதாய் தற்காலத்தில் கட்டப்பட்டவை. இவைகளில் சிவலிங்கப் பெருமானுடைய முக்கிய சந்நிதியுடன், விஷ்ணுவுக்கும் (ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம்) விக்னேஸ்வரருக்கும், துர்க்கை அல்லது அம்பாளுக்கும், ஹனுமாருக்கும் பிரத்யேகமாய், ஒரே ஆலயத்தில் சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன. இவைகளை பெரும்பாலும் மைசூர் ராஜ்யத்தில் காணலாம். பஞ்சாயதனம் என்றால், ஐந்து சங்கிதிகள் அல்லது கோயில்கள் அடங்கியது, என்று அர்த்தமாகும்.

கோயில்களின் காலத்தை அறிதல்

மேற்குறித்த் சில்ப விவரங்களைக்கொண்டு, நமது நாட்டிலுள்ள சிவாலயங்களும் அவைகளின் பகுதிகளும், எக்காலத்தில் கட்டப்பட்டனவென்று நாம் சுமாராகக் கூறக்கூடும். ஒரே நாலத்தில் முற்றிலும் கட்டப்பட்ட சிவாலயமா யிருந்தால், அதன் சில்பத்தைக்கொண்டு, இக்காலத்தில் கட்டப்பட்டதென நிர்ணயித்தல் சுலபமாகும். அப்படிப்பட்ட சிவாலயங்கள் சிலவே. பல்லவ கட்டிடங்களெல்லாம் பெரும்பாலும் எக்காலத்தில் முற்றிலும் கட்டப்பட்டவையென்று கூறலாம். அவைகளெல்லாம் ஒரே வகைச் சில்ப முடையவைகளா யிருக்கின்றன. சோழர்கள் காலத்திய சிவாலயங்கள், கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தப்பட்டு பூர்த்தியாயின என்று ஒருவாறு கூறலாம். இதற்கு சில உதாரணங்களைக் கருதுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/32&oldid=1294657" இலிருந்து மீள்விக்கப்பட்டது