பக்கம்:Siva Temple Architecture etc..pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயில்: -இது ராஜ ராஜன் எனும் கீர்த்திபெற்ற சோழ அரசனால் கி.பி. 1003 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1007 ௵ முடிக்கப்பட்டது. இது சோழ சில்பமுடையது. கிழக்கு கோபுரம் 1330 ௵ கட்டப்பட்டது; இது விஜயநகர சில்ப மமைந்தது. வடபுறமுள்ள சுப்பிரமணியர் கோயில் 17 ஆம். நூற்றாண்டில் கட்டப்பட்டதாக மதிக்கப்படுகிறது; சிலர் இது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக எண்ணுகின்றனர்; ஆயினும் ஒன்றுமாத்திரம் நிச்சயம்; இது ராஜராஜனால் கட்டப்பட்டதல்ல. இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிறு கோயிலும் பிறகே கட்டப்பட்டதாகும். மேற்கிலுள்ள சித்தர்கோயில் மிகவும் புதிய கட்டிடமாம். இங்குள்ள வினாயகர் கோயில் 1801௵ சரபோஜி மகாராஜாவால் கட்டப்பட்டது.

சிதம்பரம் பெரியகோயில் :-இது மிகவும் புராதன காலத்தில் மரத்தாலாய சிறு ஆலயமா யிருந்ததென்று எண்ணுவதற்கு ஆதாரங்கள் உள; அது காலக்கிரமத்தில் ஜீரணமாயாவது போயிருக்கவேண்டும், அல்லது அதைப் பிரித்து கற்கோயில்கள் உண்டானபோது, கற்கோயிலாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். தற்காலக் கோயிலில் மிகவும் பூர்வீகபாகம் இங்கிருக்கும் நிர்த்தசபையாம். இதற்கருகிலுள்ள கனகசபையும் மிகவும் புராதனமானதாம். இது கி.பி. 985௵ இருந்ததென்பதற்கு, கல்வெட்டுகள் உள. இதைச் சுற்றிலும் உள்ள மதிலிலடங்கிய 320 அடி சதுரமுள்ள கோயில்தான் பழய கோயில்; இது விக்கிரம சோழனால் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பார்வதி ஆலயம் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோபுரங்கள் சுமார் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை, இவைகள் விஜயநகர சில்பமுடையவை; பெரும்பாலும் இரண்டாம் பிராகாரமும் அக் காலத்தியதே. ஆயிரக்கால் மண்டபம் 1395-1655 வருடங்களுக்குள் கட்டப்பட்டதாம். சுப்பிரம்னியர்கோயில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக மதிக்கப்படுகிறது. வடக்கு கோபுரம் 1516௵ கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இங்குள்ள கோவிந்தராஜருடைய சந்நிதி தற்காலம் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது.

திருவாரூர் கோயில்:-இங்கு வன்மீசுநாதர் கர்ப்பக்கிரஹம் தான் மிகவும் பழமையானது. இது 191x156 அடி விஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/33&oldid=1293956" இலிருந்து மீள்விக்கப்பட்டது