பக்கம்:Siva Temple Architecture etc..pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

சுண்ணாம்பு அடிப்பது உசிதமல்ல. கோயில்களில் சுண்ணாம்பு கட்டிடங்களுக்கும் வெளி மதில்சுவர்களுக்கும் தவிர, கருங்கற்பாகங்களுக்கெல்லாம் வெள்ளைச் சுண்ணாம்படிப்பது அவ்வளவு அழகாயில்லை என்பது என் அபிப்பிராயம் மாத்திரமன்று, நமது கோயில் சில்பங்களைப் புகழ்ந்து பேசும் பலநாட்டு சாஸ்திரீகர்களுடைய அபிப்பிராயமுமாம்.

கோயில்களே ஜீரணோத்தரணம் செய்யும் பக்திமான்கள் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பழய மண்டபங்கள் முதலியவைகளை மராமத்து செய்யும்போதும், புதியனவாய் ஏதாவது கட்டும்போதும், கருங்கற்களையும் செங்கற்களையும் உபயோகிக்கவேண்டுமே யொழிய, தகரக் கொட்டைகளையும், துத்தினாமத்தாலாகிய மேற்பரப்புகளையும் உபயோகிப்பது ரசாபாசமாகத் தோன்றுகிறது என்பதற்குச் சந்தேகமில்லை. இதை அவர்கள் முற்றிலும் தவிர்க்கும்படியாக நான் வேண்டிக் கொள்ளுகிறேன்.

பழய கோயில்ளைப் புதுப்பிப்பதில் மைசூர் ராஜ்யத்து பூர்வீக நாகரீக சாஸ்திர இலாகாதார்கள் மிகவும் அருமையாக, பழய அழகும் அருமையும் கெடாதபடி மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். சில இடங்களில் அவர்கள் மாரமத்து செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாதபடி, அவ்வளவு அழகாக பூர்வீக வேலையை ஒட்டிச் செய்திருக்கிறார்கள் ; இவர்கள் முறையை மற்றவர்களும் கைப்பற்றுவது மிகவும் நலமாகும்.

தென் இந்தியா சிவாலயங்களிலுள்ள சில அருமையான
சிற்ப வேலைப்பாடுகள்.

மைசூர் ராஜ்யத்திலுள்ள கேதாரீஸ்வரர் கோயில் முதலிய சிவாலயங்களிலுள்ள ஹொய்சல சில்ப விசித்திரங்களைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன. மற்ற இடங்களிலுள்ள சில்ப விசித்திரங்களில் சிலவற்றை இங்கு குறிக்கிறேன். இவைகளை ஹம்பி, தென்காசி, மதுரை, திருநெல்வேலி, முதலிய இடங்களிலிருக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

(1) யாளிகளின் வாயில் உருளும்படியான கருங்கற் குண்டுகள்.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/37&oldid=1294659" இலிருந்து மீள்விக்கப்பட்டது