பக்கம்:Siva Temple Architecture etc..pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தாங்கள் செய்துகொண்ட பிரார்த்தனையைச் செலுத்தவோ, அல்லது லிங்கப்பிரதிஷ்டையின் புண்ணியத்தைப் பெறவோ, பல சிவபக்தர்கள் பெரிய கோயில்களில் இவ்வாறு சிறு கோயில்கள் கட்டியிருக்கின்றனர் என்பதற்குச் சந்தேகமில்லை. சில இடங்களில் வெளிப் பிராகாரங்களிலுள்ள சிறு சிவலிங்கங்கள் சன்யாசம்பெற்ற சிவபக்தர்களுடைய சமாதிலிங்கங்கள் என்று எண்ணப்படுகின்றன. (இது இன்னும் ஆராய வேண்டிய விஷயம்.)

மாற்றப்பட்ட சிவாலயங்கள்

இவைகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் (1) பூர்வீக சிவாலயங்கள் வேறு மதக் கட்டிடங்களாக மாற்றப்பட்டவை. (2) வேறு மதக் கட்டிடங்கள் சிவாலயங்களாக மாற்றப் பட்டவை. இவ்வாறு இவைகள் மாற்றப்பட்ட போது இவைகளிலுள்ள சில சில்பங்களும் மாற்றப்பட்டன வென்பதற்குச் சந்தேகமில்லை.

முதற் பிரிவிலடங்கிய, வேறு மத ஆலயங்களாக மாற்றப்பட்ட சிவாலயங்களை முதலில் கருதுவோம். வட இந்தியாவில் மகம்மதியர்கள் வந்தபிறகு பல சிவாலயங்கள் இடிக்கப்பட்டு, மசூதிகளாய் மாற்றப்பட்டன வென்பதற்கு சரித்திர அத்தாட்சியே உளது. இதற்கு முக்கிய உதாரணமாக காசி க்ஷேத்திரத்திலிருந்த பூர்வீக விஸ்வநாதர் ஆலயம் இடிக்கப்பட்டு ஔரங்கசீப்பினால் மசூதியாகக் கட்டப்பட்டதைக் கூறலாம். அம்மசூதியில் தற்காலமும் சிவாலய சிற்பங்கள் சில இருக்கின்றன.

தென் இந்தியாவில் பதினான்காம் நூற்றாண்டில் மகம்மதியர்கள் நுழைந்த பிறகு, சில சிவாலயங்கள் மாற்றப்பட்டன என்பது நிச்சயம். பெரியகாஞ்சி புரத்தில் இரண்டொரு சிவாலய மண்டபங்கள் மசூதிகளாக மாற்றப்பட்டிருபபதைத் தற்காலமும காணலாம்.

அன்றியும் பல பூர்வீக சிவாலயங்கள், வைஷ்ணவ ஆயயங்களாக மாற்றப் பட்டிருக்கின்றன; இவைகளில் சிலவற்றைக் கருதுவோம்.

(1) சின்ன காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம் ஆதியில் சிவாலயமாயிருந்த தென்பதற்கு பல.அத்தாட்சிகள் உண்டு ; அவைகளில் சிலவற்றை சுருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/40&oldid=1294662" இலிருந்து மீள்விக்கப்பட்டது