பக்கம்:Siva Temple Architecture etc..pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

மாக எழுதுகிறேன். இந்த ஊர் ஆதியில் அத்தியூர் என்கிற பெயரையே உடைத்தா யிருந்தது; பழய ஆலயம் கிழக்குநோக்கி யிருந்தது; பெரிய கோபுரம், சைவ ஆகமப்படி கிழக்கில்தானிருக்கிறது, தென்கிழக்கு மூலையில்தான் மடப்பள்ளி யிருக்கிறது ; தற்கால ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உற்சவங்களெல்லாம் மேற்கிலிருக்கும் சிறிய கோபுர வழியாகத்தான் நடந்தேறி வருகிறது. சிவாகமப்படி கோயில்களில் ஸ்வாமியின் கர்ப்பக்கிரகம் முதலிலும், அம்மன் கர்ப்பக்கிரகம் பிறகும் இருப்பது வழக்கம், தற்காலம் மேற்கு கோபுரவாயிலாக் நுழைந்தால் அம்மன் கர்ப்பக்கிரகம் முந்தி யிருக்கிறது; ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மலைமீதிருப்பதாக ஐதிகம், இங்கு மலையே கிடையாது; பூர்வீக சிவாலயம் நான்குபுறமும் மூடப்பட்டு அதன் பேரில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளை எழுந்தருளப் பண்ணி யிருக்கிறார்கள் என்பது நிச்சயம்; ஸ்ரீ வரதராஜர் சந்நிதிக்குப் போவதென்றால், மேற்குபக்கம் நுழைந்து போய், கிழக்கி லிருக்கும் படிகளின் மீதேறி மறுபடியும் திரும்பிப் போகவேண்டும்; இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அத்தியூர் என்றே இருக்கிறது : அத்தியூரிலிருந்த சிவாலயத்திற்கு புண்யகோடீஸ்வார் கோயில் என்று பெயர் இருந்ததாக அறிகிறோம்; தற்காலம் ஸ்ரீ வரதருடைய விமானத்திற்கு புண்யகோடி விமானம் என்று பெயர் வழங்கப்படுகிறது. கடைசியாக பழய வைஷ்ணவ ஆழ்வார்கள் ஸ்ரீ வரதராஜரைப்பற்றி பதிகங்கள் பாடினதாக இல்லை; காஞ்சிபுரத்திலுள்ள பல திருப்பதிகளுக்கு பாசுரங்கள் இருக்கின்றன (இன்னும் பல ஆதாரங்கள் உண்டு அவைகளை யெல்லாம் இங்கு எடுத்து எழுதுவதற்கு இடமில்லை). சென்னை ராஜதானி ஜில்லா டைரெக்டரி (District Gazetteer) எனும் புஸ்தகத்தில் நிஷ்பட்சபாதமாக இதைக் கருதவல்ல ஒரு ஆங்கிலேயர், இது ஆதியில் சிவாலயமாயிருந்து பிறகே வைஷ்ணவ: ஆலயமா மாற்றப்பட்டதெனக் கூறியுளார் ; காலஞ் சென்ற பண்டித நடேச சாஸ்திரிகளும் இதே அபிப்பிராயம் கொண்டிருந்தார். விஜயநகரத்தரசர்கள் காலத்தில், ஒரு தளகர்த்தர், கிலமாக விருந்த சிவாலயத்தை, வைஷ்ணவ ஆலயமாக மாற்றினாரென்று நம்புவதற்கு அத்தாட்சிகள் உண்டு. இவ்விஷயம், மத அபிமானத்தை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/41&oldid=1293964" இலிருந்து மீள்விக்கப்பட்டது