பக்கம்:Siva Temple Architecture etc..pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

யில் விஷ்ணு ஆலயமாயிருந்ததை அகஸ்திய முனிவர் விஷ்ணுவின் விக்ரஹத்தை சிவலிங்கமாக மாற்றி, சிவாலயமாக மாற்றியது புராணக்கதையாம். தற்காலமும் சிவ லிங்கத்தின் பின்பாக மஹா விஷ்ணு இருப்பதாகக் சொல்லப்படுகிறது. சிவலிங்கத்திற்குக் தற்காலமும் துளசி பூஜை செய்யப்படுகிறது. கோயிலில் தற்காலமும் சில பழய வைஷ்ணவ சின்னங்களிருக்கின்றன. ஸ்காந்த புராணம் இம்மாறுதலை ஒப்புக் கொள்கிறது.

(2) சென்னை ராஜதானி, தார்வார் பிரிவிலுள்ள, கண்டுகோல் எனும் கிராமத்தில் இருக்கும் சிவாலயம், வைஷ்ணவ ஆலயமாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதாக டாக்டர் கசின்ஸ் கூறுகிறார்.

அழிக்கப்பட்ட பூர்வீக சிவாலயங்கள்

வட இந்தியாவில் மகம்மதியர்களுடைய ஆளுகை வந்த பிறகு பல சிவாலயங்கள் முக்கியமாக ஔரங்கஜீப் காலத்தில் அழிக்கப்பட்டன வென்பது சரித்திரப் பிரசித்திமான சங்கதியாம்; இதற்கு உதாரணமாக அழிக்கப்பட்ட பூர்வீக காசி சிவாலயத்தைக் கூறலாம். தென் இந்தியாவிலும் மாலிக்காபூர் பிரவேசித்த காலத்தில் பல சிவாலயங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு உதாரணமாக பதின்மூன்றாம் ஆண்டில் இருந்த மதுரை கோயிலிடிக்கப்பட்டதைக் கூறலாம். போர்த்துகேயர் இந்தியாவிற்கு வந்த பிறகு நாகபட்டணம் முதல் சென்னை சாந்தோம் வரையில் கடற்கரை யொரமிருந்த பல சிவாலயங்கள் அவர்களர்ல் அழிக்கப்பட்டது. அவர்கள் சரித்திரத்தின் மூலமாகவே நாம் அறிந்த விஷயம். அவ்வாறு அழிக்கப்பட்ட சிவாலயங்களில் கடற்கரை யோரமிருந்த ஆதி மைலாப்பூர் கோயிலும் ஒன்று என்று நாம் எண்ணுவதற்கு பல ஆதாரங்கள் உள; தற்காலத்திய கபாலீஸ்வரர் கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டதாம்.

சில சிவாலயங்கள் முற்றிலும் அழிக்கப்படா விட்டாலும் அவைகளின் சிலபாகங்கள் இடிக்கப்பட்டு வேறு கட்டிடங்களாக உபயோகிக்கப் பட்டிருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரத்து சிவாலயத்தைக் கூறலாம். கோயிலைச் சுற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/44&oldid=1294663" இலிருந்து மீள்விக்கப்பட்டது