பக்கம்:Siva Temple Architecture etc..pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மூலமாக அறிகிறோம். சென்னை ராஜதானியில் செஞ்சிக் கோட்டைக்கும் போகும் வழியிலுள்ள பெருமுக்கலில் இருக்கும் சிவாலயம், ஒரு கோட்டையாகச் சில காலம் பாவிக்கப்பட்ட தென்பது திண்ணம்; எதிரிகளின் குண்டு வீச்சினால் கோயில் பல இடங்களில் இருந்திருப்பதை இன்னும் காணலாம். சென்னைக் கடுத்த திருவொற்றியூர் கோயிலின் பழய உட்பிராகாரத்தின் மதில் சுவரை, பிறகு விஜய நகரத்தரசர்கள் அரணுக்காக உயர்த்தியிருப்பதைக் காணவும். சென்னை ராஜதானியில் சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு அடிமட்டத்துடன், பூர்த்தியாகாமல் விடப்பட்டிருக்கும், “ராயகோபுரங்கள்" என்று தற்காலம் அழைக்கப்படும் விஜய நகரக கட்டிடங்கள், அதிக உயரமாகக் கட்டப்பட்டு அவைகளின் உச்சியிலிருந்து பகைவர் தூரத்தில் வரும்பொழுதே கண்டுபிடிக்க உபயோகப் படத்தக்கவைகளாய் ஆரம்பித்திருக்க வேண்டுமென்று எண்ண இடமுண்டு. விஜய நகரராஜ்யம் தலைக்கோட்டை யுத்தத்தில் அழிந்த போது இவைகளைப் பூர்த்திசெய்யாமல் விட்டு விட்டனர். இவைகளைக் கட்டும்போது எதோ கருங்கல்லிற்குள் தேரை யொன்று அகபட்டது, ஆகவே அவைகள் அப்படியே முடிக்கப்படாமல் விடப்பட்டன, என்பது கட்டுக்கதையாம்.



R. v. Press, Madras. Q.H.M.S. 16A. C. 500


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/46&oldid=1294667" இலிருந்து மீள்விக்கப்பட்டது