பக்கம்:Siva Temple Architecture etc..pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிவாலய சில்பங்கள்
முதலியன


நமது தாய் தேசமாகிய இந்தியா, கோயில்கள் நிறைந்த தேசம் என்று அன்னியர்களால் புகழப்பட்டிருக்கிறது. அக்கோயில்களைக் கண்டு மகிழ, ஐரோப்பா, அமெரிக்கா, முதலிய கண்டங்களிலிருந்து பலர் வருஷா வருஷம் வருகின்றனர். நமது கோயில்களைப்பற்றி இதுவரையில் பிரசுரிக்கப்பட்ட புஸ்தகங்களெல்லாம், பெரும்பாலும், சூவெல், பெர்கூசன், டுப்ரெயில் முதலிய ஐரோப்பியர்களால் எழுதப்பட்டவைகளே. இது இந்தியர்களாகிய நமக்கு ஒரு மானக் குறைவாகும் ; ஆகவே இக்குறையைச் சிறிதளவாவது நீக்க வேண்டியது நமது கடன் என எண்ணி இச்சிறு நூலை இயற்றலானேன்.

கோயில்கள் உண்டானது

மனிதன் இவ்வுலகில் உண்டாகி, தெய்வம் ஒன்றுண்டு எனும் உணர்ச்சியைப்பெற்ற பிறகு, அத்தெய்வத்திற்கு இருப்பிடமாக அதனைத்தொழ அவன் ஓர் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்பது நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயமே.

மனிதர்கள், வேட்டையாடி குகைகளில் வசிக்கும் நாகரீகத்தை யடைந்தபோது, அக்குகைகளில் அழகியவற்றுள் தாங்கள் வணங்கும் தெய்வங்களை நியமித்துக் கோயில்களாகப் பாவித்திருக்கவேண்டும். பிறகு ஆடுமாடுகள் மேய்த்து பயிர்களை உண்டாக்கி, குடிசைகளில் வசிக்கும் நாகரீகத்தை யடைந்தபோது, அழகிய சிறு குடிசைகளில் பிரத்தியேகமாகத் தங்கள் தெய்வங்களை வைத்து கோயில்களாகப் பாவித்திருக்கவேண்டும். பிறகு செங்கற்களால் வீடுகள் கட்டி பட்டணங்களில் வசிக்கும் நாகரீக திசை யடைந்த போது, செங்கல் மரம் முதலியவைகளால் கோயில்களைக் கட்டி யிருக்கவேண்டும், என்பது நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமே. ஆயினும் இப்படிப்பட்ட கோயில்களெல்லாம் பல நூற்றாண்டுகள் அழியாமலிருப்பது கடினம். கருங்கற்களால் கோயில்களை அமைக்க மனிதர்கள் கற்ற பிறகுதான், அக்கோயில்கள் பல நூற்றாண்டுகளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/5&oldid=1294650" இலிருந்து மீள்விக்கப்பட்டது