பக்கம்:Siva Temple Architecture etc..pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

நிரந்தரமாய் இருக்கத் தலைப்பட்டன. இந்தியாவில் புத்தர் காலத்திற்கு முன்பாக எல்லாக் கட்டிடங்களும் மரத்தாலானவை யென்றும், செங்கல் கட்டிடங்கள் கி. மு. 5-ஆம் ஆண்டிற்கு பிறகுதான் பெரும்பாலும் தோன்றினவென வென்றும், அதற்குப் பிறகுதான் கருங்கல் கட்டிடங்கள் கட்டத் தலைப்பட்டன வென்றும் எண்ணப்படுகிறது.

நமது தேசமாகிய இந்தியாவிலும் கோயில்கள் இம்மாதிரியாகத்தான் வளர்ந்து வந்தன என்று நாம் கூறலாம். தற்காலத்திலும் நாட்டுப்புறங்களில், பெரிய இரண்டு மூன்று கற்பாறைகளாலாகிய பொந்துகளில் கிராம தேவதைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மூங்கில்களை நிறுத்தி ஓலைகளைக்கொண்டு மூடப்பட்ட குடிசைகளில் கிராமத்தார் வணங்கும் சிறு தெய்வங்கள் இருப்பதை இன்னும் காணலாம். அன்றியும் மண் சுவர்களை யெழுப்பி, ஒடுகளினால் கூரைகளை அமைத்துக் கட்டிய பல சிறு கோயில்களை கிராமாந்திரங்களில் பல இடங்களில் இன்றும் காணலாம் ; சாதாரணமாய் எல்லாக்கிராமங்களிலும், கிராமப் பிடாரி ஐயனார் கோயில்கள் பெரும்பாலும் தற்காலமும் செங்கல் கட்டிடங்களாகத்தானிருக்கின்றன. கடைசியாகக் கருங்கல் கோயில்கள் பல நமது தேசத்தில் கட்டப்பட்டன.

கட்டிடங்களைக் கட்டும் சாஸ்திரத்திற்கு சில்பசாஸ்திரம் என்று பெயர். அப்படிப்பட்ட கட்டிடங்களில் கோயில்களைக் கட்டும் சாஸ்திரத்திற்கு கோயில் சில்பசாஸ்திரம் என்று கூறலாம்; இதற்கு உதாரணமாக மானச சாரமெனும் நூலைக் கூறலாம். கோயில்களைப் பற்றிக் கருதுமிடத்து நமது இந்தியா தேசத்தை முக்கியமாக இருபிரிவாகப் பிரிக்கலாம் ; விந்திய பர்வதத்திற்கு மேல்பாகம் முள்ளப் பிரதேசம், கீழ்பாகமுள்ள பிரதேசம்; மேல்பாகத்திற்கு ஆர்யா வர்த்தம் எனப் பெயரிட்டு, அங்குள்ள கோயில்களை ஆரிய சில்பம், அல்லது பெர்கூசன் துரை கூறுகிறபடி, இந்தியஆரிய சில்பம் உடையவை என்றும், கீழ்பாகத்தை, திராவிட தேசமென அழைத்து, இங்குள்ள கோயில்களே திராவிட சில்பமுடையவை என்றும் கூறலாம்.

இவ்விரண்டு சில்பங்களில் நமது தேசத்தில் புராதனமாயிருந்தது திராவிட சில்பமே. புராதன விஷயங்களைப் பற்றி ஆராச்சி செய்யும் சாஸ்திரக்காரர்கள், ஆரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/6&oldid=1288521" இலிருந்து மீள்விக்கப்பட்டது