பக்கம்:Subramanya Shrines.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: சுப்பிரமண்ய ஆலயங்கள் திருத்தணி :-அல்லது திருத்தணிகை. சூரபத்மனை வென்ற பிறகு கோபம் தணிந்த ஸ்தலமாதலால் திருத்தணிகை எனப் பெயர்பெற்றது. மதராஸ் ரெயில் ஸ்டேஷன். கோயில் ஒரு சிறு குன்றில், ஸ்டேனுக்கு 1 மைலிலிருக் கிறது. இரண்டு பெரிய உற்சவங்கள்-தை மாசம்-ஆடி மாசம். இங்கு பல சத்திரங்கள் உண்டு. மலே ஏற 6ே5 படிகள் கட்டப்பட்டிருக்கின்றன-ஜனவரி மாசம்முதல் தேதி திருப்புகழ் பாராயணம் செய்துக் கொண்டு பல பக்தர்கள், ஒரு திருப்புகழுக்கு ஒருபடியாக, ஏறிச் செல்கின்றனர். மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை எனும் குளம் உளது. ஸ்வாமிக்கு செங்கல்வராயர் எனும் திருகாமம். செங்கலுவம்-செங்கழுநீர்ப் புஷ்பம், ஆடி மாசம் தெப்பல் உற்சவம், சித்திரை மாசம் தேவ சேஞ கல்யாணம். திரியம்பகபுரம் :-மாயவரம் தாலூகா தஞ்சாவூர் ஜில்லா முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. திருப்பதி:-மதராஸ் ரெயில் ஸ்டேஷன். வடஆற்காடு ஜில்லா-இது ஆதியில் முருகர் ஆலயமாக இருந்ததென் பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. அருணகிரிகாதர் இந்தி ஸ்தல தெய்வத்திற்கு திருபுகழ் பாடி யிருக்கிருர் ஆதி யில் இங்கிருந்த மூல விக்ரஹம் விஷ்ணுவின் விக்ரஹம் அல்லவென்று வைஷ்ணவர்களே ஒப்புக்கொள்கின்ற னர். வடக்கிலிருந்து வரும் யாத்திரீக ஜனங்கள் இந்த விக்ரஹத்தை இன்றும் பாலாஜி என்றே அழைக்கின் றனா. திருமலை :-திருநெல்வேலி ஜில்லா-குற்ருலத்திற்கு 10 மைல் துாரம்-முருகர் ஆலயம், ஸ்வாமி பால சுப்பிரமணியர்திருவின் கேள்வனை முகுந்தளுல் இம்மலே சிருஷ்டிக் கப்பட்டபடியால் திருப்பதினனும் பெயர்பெற்ற தென் பர்-திர்த்தம் திருக்குவளேச்சுனை-மலைமீதேற சுமார் 1000 படிகள் உள. தீர்த்தமலை :-மலேயாள தேசம் மோர்பூர் ஜங்ஷனுக்கு அரு கிலுள்ளது. முருகர் ஆலயம்-திருப்புகழ்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/14&oldid=731109" இலிருந்து மீள்விக்கப்பட்டது