பக்கம்:Subramanya Shrines.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமண்ய ஆலயங்கள் 13. துறையூர் :-(திரு) தென் ஆற்காடு ஜில்லா முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. தென்மலை :-திருநெல்வேலி ஜில்லா-தென்காசிக்கு அருகி லுள்ளது, முருகர் ஆலயம். தென்னேரிகிரி:-கோயமுத்துார் ஜில்லா-முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. தேவனூர் :-வடஆற்காடு ஜில்லா-விளிஞ்சிபுரத்திற்கு அருகி லுள்ளது-முருகர் ஆலயம். திருப்புகழ்பெற்றது. தொழுப்பேடு :-செங்கற்பட்டு ஜில்லா-முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. திம்மபுரம் :-துளுவ நாட்டிலுள்ளது-முருகர் ஆலயம் திருப் புகழ் பெற்றது. நெருவூர் :-திருச்சிராப்பள்ளி ஜில்லா.முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. பட்டாலியூர் :-கோயமுத்துார் ஜில்லா.முருகர் ஆலயம் திருப் புகழ் பெற்றது. பரங்குன்றம் :-(திரு)-மதுரையிலிருந்து 4 மைல் தென் மேற்கு தென்இந்தியா ரெயில் ஸ்டேஷன். குன்று சமுத்திர மட்டத்திற்கு 1050 அடி உயரம். முருகர் ஆல யம்-கர்ப்பக்கிரஹம் மலேயில் செதுக்கப்பட்டிருக்கிறது மூன்று அறைகள் உள. நடுவில் துர்க்கை, வடக்கில் விஞ்யகர் தெற்கில்இருப்பது தேவசேனசமேத சுப்பிர மண்ய மூர்த்தியாகத் தொழப்படுகிறது. இச்சிலே உரு வம் சதாகாலம் மூடப்பட்டிருக்கிறது. உண்மையில் இவ்வுருவம் ஜேஷ்டா தேவியின் உருவம் என்று டாக் டர் மீனட்சி அம்மை கூறி யிருக்கிருர்கள். சுப்பிரமண் யர் தெய்வயானையை மணந்த ஸ்தலம் என்பது புரா ணம்; இங்கு வள்ளியம்மைக்கு கோயிலில்லை. உற்சவ மூர்த்திக்கு தேவசேன ஒரே அம்மன்தான் - திருப்புகழ் பெற்ற ஸ்தலம். பிரம்மோற்சவம் பங்குனி மாசம், தேவ சேன திருக் கலியான உற்சவம் விசேஷம்; இதற்கு மதுரையிலிருந்து மீட்ைசி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/15&oldid=731110" இலிருந்து மீள்விக்கப்பட்டது