பக்கம்:Subramanya Shrines.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை

 சிவஞானம் முதிர்ந்த சிவபக்தர்கள், பரமசிவம் வேறு, பாலசுப்பிரமண்யம் வேறு, என்று பிரிப்பதில்லை ; ஆயினும் லெளகீகத்தில், சிவநேயர்கள் இரண்டையும் வெவ்வேறாகப் பிரித்து வழிபட்டு வருகின்றனர். இக்காரணம்பற்றியே, பெரிய சிவாலயங்களில், பரமசிவத்தின் லிங்க மூர்த்திக்கு வேறு சந்நிதியும், முருகருக்கு வேறு சந்நிதியும் அமைக்கப் பட்டிருக்கிறது; இப்பிரிவினைக் கருதியே, எனது சிவாலயங்கள்-இந்தியாவிலும் அப்பாலும்’ எனும் நூலில், கோயில் களில், முக்கிய கா்ப்பக்கிரஹங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஆலயங்களே சிவாலயங்கள் எனப் பிரித்து எழுதியுள்ளேன். இச்சிறு நூலில், கோயில்களில் முக்கிய கர்ப்பக் கிரஹங்களில், சுப்பிரமண்ய ஸ்வாமியை பிரதிஷ்டை செய்திருக்கும் இடங்களே, சுப்பிரமண்ய ஆலயங்களாகப் பிரித்துக் குறித்திருக்கிறேன்.

முருகர், ஆரியர்கள் இந்தியாவுக்கு வருமுன் தமிழர்கள் வழிபட்டுவந்த தெய்வமாம்; ஆகவே, ஏறக்குறைய எல்லா முருகர் ஆலயங்களும், தென் இந்தியாவிலேயே உள்ளன. வட இந்தியாவில் முருகர் ஆலயங்கள் இல்லையென்றே ஒரு வாறு கூறலாம்; ஆகவே எல்லா முருகர் ஆலயங்களும் திராவிட சில்பம் உடையன என மதிக்கலாம்.

ஆதிகாலத்தில் தமிழ் நாடுகளிலுள்ள மலைகள் மீதும் குன்றுகள்மீதும் இருந்த ஆலயங்கள் பெரும்பாலும் முருகர் ஆலயங்களாயிருந்தன என்பதற்கு ஐயமில்லை. ' குன்றுதோறாடல்” எனும் சொற்ருெடரைக் காண்க. தொல்காப்பியத்தில் "சேயோன் மேய மைவரை உலகமும் ' என்றிருக் கிறது. இதல்ை குறிஞ்சி நிலக் கடவுள் முருகர் என்பது வெளியாகிறது.

எல்லா சுப்பிரமண்ய ஆலயங்களிலும்,அம்மன்களின் பெயர், வள்ளி தெய்வயானை என்றே இருப்பதால், அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/5&oldid=967177" இலிருந்து மீள்விக்கப்பட்டது