பக்கம்:The Fair Ghost.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.JH = Luff» i.Jis, _ 褒 பேயல்ல பெண்மணியே (அங்கம் - 8 தெல்லாம் தவறென வறிந்து உன்னே மன்னிப்பு கேட் பான், அஞ்சாதே. அம்மா, அவர் குணத்தை நீர் நன்கு யறியீர். தான் பிடித்த முயலுக்கு மூன்றே காலென்று பிடிவாதஞ் செய்பவர். அவர் மனம் மாறுமென்று நான் கினேக்கவில்லை. அப்படி யல்ல. நாம் இளவரசரை ஒன்றும் கேட்கவில் லையே. அவரை நேரிற்கேட்டு, நீ நிரபராதி யென்று ரூபிப்போமாகில் உன் பிராணநாதர் ஒப்புக்கொள்வார் என்பதற்குச் சந்தேக மில்லை. இளவரசர் வனத்திற்கு வேட்டையாடப் போயிருக்கிரு.ராம். இந்த வழியாகத் தான் இன்று திரும்புவார் என்று சொன்னர்கள். நாம் சற்றிங் கிருந்து அவரை நேரிற் கண்டு கேட்போம். அப்படியே செய்வோம்.-அம்மா, அந்த எதிர்ப்புறம் போய் இருப்போம் ; இங்கிருந்தால் அந்த ஆற்றங் கரை நன்முய்த்தெரிகிறது. அதைப் பார்க்கும்பொழு தெல்லாம் என் பிராணநாதரும் நானுமாக அக் கரையோரம் விளை யாடிய விளையாடல்களெல்லாம் என் மனத்திற்கு ஞாப கம் வர என்னேயு மறியாதபடி எனக்குத் துக்கம் வருகிற தம்மா ! (அழுகிருள்) லலிதா ! என் கண்ணல்ல i-வா, அழாதே ! அம்மா, அதோ பிராணநாதர் வருகிருர் ! ஆம், அதோ பார் ! நான் சொல்லவில்லையா ? உன்னைப் பிரிந்த துக்கம் அவனுக்கு மில்லாமற் போமா ? அவனும் என்ன கோலத்தி லிருக்கிருன் பார். (ஒரு புறமாக அழைத்துச் செல்கிருள்.) ாகுவீசன் வியசனத்துடன் வருகிருன். கண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக் கொண்டுவிடு மானுர்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ!' ஐயோ! இப்படிப்பட்ட பெண் ஜன்மங்களை ஏனே படைத் தான் பிரம்மன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/44&oldid=731651" இலிருந்து மீள்விக்கப்பட்டது