பக்கம்:The Fair Ghost.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 鳕。 毋誓。 பேயல்ல பெண்மணியே (அங்கம் - 5 பார்த்து, என்மீது சந்தேகங் கொள்ளவில்லை யென்று கூறி விடும். அவ்வளவு போது மெனக்கு. நான் சுகமாய் உயிர் விடுவேன்-அப்பொழுது : கேட்டனையா ? (பணிந்து ஈசனே, நான் கண்ணிர் விடுவது எனது துயரம் பற்றியே, என் பிராணநாதர்மீது எனக்குக் கொஞ்ச மேலும் கோப மில்லை, அவரை நான் மனப்பூர்வமாய் மன் னித்தேன். என் துயரம் எவ்வளவு அதிகமா யிருக்கிற தோ அவ்வளவு அதிகமாய் அவர் சந்தோஷம் இருக்கு மாக இதுவே என் கடைசி பிரார்த்தனை உமது பாதத் திற்கு. - இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கின்றதா? ஹா கண்ணே - (லலிகை யருகிற் செல்ல முயல, ாாதாப்பிரியன் தடுக்கி முன்.) ஐயோ, என் மோதிரம் அதையாவது நான் சாகு மளவும் அவரைப்போல் பார்த்துக் கொண்டிருப்பதற்கு என் னிடமே விட்டிருக்க லாகாதா ? அதையும் பிடிங்கிக் கொண் டார் ; அவ ரிஷ்டம். அவருக்கு யார் காதலியோ அவள் கரத்தில் தானே அது இருக்கவேண்டும்.-ஆ, புஷ்பங் கான், உங்களேயாவது முத்தமிடுகிறேன். நீங்கள் செய்த பாக்கியம் ! என் பிராணநாதரின் அதரம் பொருந்தப் பெற்றீர்.--ஐயோ, அவரைப் பிரிந்ததினுல் அப்பிரிவை யாற்ருது உதிர்த்தீர்கள், கல் மனத்தையுடைய நான் பாபி, இன்னும் உயிருட னிருக்கிறேன்.-ஆ ! மறுபடியும் என் காதலர் என்முன் வந்து என்னேக் கட்டி யணைத்து ஒரு முத்தம் தருவாராயின் (லலிதையைக் கட்டி யணைத்து) கண்ணே கண்ணே ! ஆ பிராணநாதா-என் மோதிரத்தைத் தாரும். (பங்கஜாட்சியின் விரலி லிருந்த மோதிரத்தைப் பிடுங்கி லலிதை யின் விாவில் அணிகிருன். பங்கஜாட்சி மெல்லப் போய்விடு கிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/70&oldid=731680" இலிருந்து மீள்விக்கப்பட்டது