பக்கம்:The Idle Wife.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தி ولنا உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 பது கடினமாம்-அப்படி யிருக்கும் பொழுது, இதை மறு படியும் கிளறி அவரை அரெஸ்டு செய்தால்-இன்னும் சில மாசங்களிருப்பவர், உடனே உயிர் துறந்தாலும் துறப்பார் -அன்றியும் உனக்கும் இது அவமானத்தை கொண்டு வரும்-மேலும் உன் அழகிய மனைவியும்-மிகவும் துக்கப் படுவாள். இதை இப்படியே அடக்கிவிட ஒரு வழி இருக் கிறது. மனம் வைத்தால்-அது முடியும். அடக்கிவிட வழியாவது நான் மனம் வைப்பதாவது ? நீங் கள் சொல்வது எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என் சமாசாரம் தான் உனக்குத் தெரியுமே-நீ இசைந்தால் -இதையெல்லாம். அப்படியே, ஒன்றும் வெளியாகாதபடி -அடக்கி விடலாம். நாயுடு காரு-என்ன மன்னிக்கவேண்டும்-நீங்கள் சொல் வது எனக்கு அர்த்தமாக வில்லை. கொஞ்சம்-யோசித்துப்பார்-அர்த்தமாகும். உம்! என்னே மன்னிக்கவேண்டும்-ஏதாவது லஞ்சம் கொடுக்கச் சொல்லுகிறீர்களா? - சீச்சி! அதை கீ கொடுக்கவும் மாட்டாய்-நான் வாங்கவும் மாட்டேன். வேறு எந்தவழி எனக்குத் தெரியவில்லை. சரி-உன் இஷ்டம்-உன் புத்தி இன்று கொஞ்சம் மழுங்கி யிருக்கிறது உம்-பிறகு உன் இஷ்டம்-கான் சொல்ல வேண்டியதைச் சொல்லியாயிற்று. ஆகவே-உேடனேஇப்பொழுதே-புறப்பட்டுப் போய், அந்தக் கைதியை அரெஸ்டு செய்-இதோ அக்கைதியிருக்கு மிடம் இக்கா கிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது-பார்த்துக்கொள் இதையே எடுத்துச் செல். (அக்காகிதத்தைப் பார்த்து) என்ன !-அடிபட்ட பிள்ளையார் கோயில் தெரு 12 நெம்பர் வீடா ஒ! இப்பொழுது எல் லாம். தெரிகிறது . ஹா' என்ன தப்பிதம் செய்தேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/40&oldid=732093" இலிருந்து மீள்விக்கப்பட்டது