பக்கம்:The Knavery Of Kalappa.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) காளப்பன் கள்ளத்தனம் 15 5了。 அழ. 历f。 சே, சொல்லவந்தேன் என்ருல்-இவ்விஷயத்தில் அவர் தப்பித்துக் கொள்ள வகையில்லாதபடி கட்டப்பட்டார். அவன் அப்படிக் கட்டுப்படுவானேன் ? உங்களைப்போல் அவ்வளவு புத்திசாலித்தன மில்லாதபடியால் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இவ்வுலகத்தில் வாலிபர்கள் வாலிபர்களே ஒவ்வொரு காரியத்தையும் செய்ய லாமாகூடாதா என்று ஆராய்ந்து பார்த்துச்செய்ய அவர் களுக்கு அவ்வளவு விமரிசை கிடையாது.என் எஜமான்பிள்ளை லாவண்யசைப் பாருங்கள், நான் எவ்வளவோ புத்தி புகட்டியும் எவ்வளவோ கண்டித்தும், உங்கள் பிள்ளையைவிட கேடான காரியத்தைச்செய்துக் கொண்டார் தனக்குத் தானுக ! உங்கள் காலத்தில் நீங்களும் யெளவன முடையவராயிருந்ததில்லையா ? மற்றவர்களைப்போல் நீங்களும் பிழைகள் இழைத்ததில்லையா ? என்று கேட்க விரும்புகிறேன். தங்களுடைய இளமையில் தாங்களும் பல பெண்களை இச்சித்ததாகவும், அக்காலத்தில் பல ஆட்டங்கள் ஆடினதாகவும் உம்முடைய மனுேபீஷ்டம் நிறைவேறுமளவும் விடாது தொடர்ந்ததாகவும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அது. வாஸ்தவம்தான், ஒப்புக் கொள்ளுகிறேன், ஆயினும், நான் காமுகனுயிருந்தேனேயொழிய, இவனைப்போல் இவ்வ ளவு துனாமா போனேன்? அவர் என்ன செய்வார் பர்பம்! அவர் ஒரு அழகிய பெண். மணியை அகஸ்மாத்தாய் சந்திக்கிருர், அப்பெண்மணி இவர் மீது இச்சைப்படுகிருள்-மாதர்களுடைய மனதைக் கவரும் படியான குணம், தன் தகப்பனுராகிய உங்களிடமிருந்து பெற் முர் போலும்-அவள் மீது இவர்காதல் கொள்கிருர்-அடிக் கடி அவளைப்போய்ப் பார்க்கிருர்-அவளுடன், பேசுகிருர்பெருமூச்சுவிடுகிருர்-தன் காதலைத் தெரிவிக்கின்ருர்-அவள் இவரது வேண்டுகோளுக் கிணங்குகிருள்-இருவரும் ஒன்ரு யிருக்கும் பொழுது, அவரது பந்தக்கள் கண்டுபிடித்து விடு கின்றனர்-அவர்கள் பலாத்காரமாய் இவரைக் கலியாணம் செய்துகொள்ளும்படி கிர்ப்பத்திக்கின்றனர். (ஒருபுறமாக்) என்ன நய வஞ்சகன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/21&oldid=732137" இலிருந்து மீள்விக்கப்பட்டது