பக்கம்:The Knavery Of Kalappa.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்கம்-2) காளப்பன் கள்ளத்தனம் 29 &lf. அழ. &#ff. ہسپانی &郡。 • جي إليه உம்முடைய குமான விஷயத்தைப்பற்றி யோசிக்கிறீர் போலும், - ஆம், அது எனக்கு அடங்காக் கோபத்தை விளைத்திருக் கிறது. பாருங்கள், இந்த உலக வாழ்க்கையென்பது மிகவும் விசித்திர மானது. எந்த கூடிணம் என்ன நேரிடுமோவென்று எதற்கும் சித்தமாயிருப்பதே மிகவும் உசிதமாகும் ; அநேக வருஷங் களுக்கு முன் ஒரு பெரியவருடைய உபதேசத்தைப் பற்றி கேள்விப்பட்டேன், அதை எப்பொழுதும் என் ஞாபகத்தில் வைத்திருப்பது கான். என்ன அது? அவர் சொன்னதென்னவென்ருல், ஒரு குடும்பஸ்தன், கொஞ்சகாலம் கழித்துத் தன் வீட்டுக்குப் போவதானல், அவன் திரும்பிப் போனவுடன், அங்கு நேரிட்டதென அவ லுக்குத் தெரிவிக்கக் கூடிய எல்லாதுர் அதிர்ஷ்டங்களைப் பற் றியும் அவன் மனதில் யோசித்துக் கொண்டே போகவேண்டும், என்பதாம்; அவன், தன்விடுதீப்பற்றி எறிந்து போய் விட்டது, தன் பணத்தை திருடர்கள் திருடிக் கொண்டு போய் விட்டார் கள் ; தன் பெண்ஜாகி இறந்து போனள், தன்மகன்கைகால அறுப்புண்டான், தன் ப்ெண் வீட்டைவிட்டு இடிப்போய்விட் டாள், என்று இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் தனக்கு நேரிட்டதாக கினைத்துக் கொள்ளவேண்டும் , பிறகு எது எது நடக்க வில்லையோ, அவைகள் நடவாததற்காக தன் அதிர்ஷ் டம் என்று சந்தோஷப்படவேண்டும் என்பதாம். என் சொந்த வாழ்க்கையில் இந்த புத்திமதியை நான் அனுசரித்து வந்திருக் கிறேன். நான் எனது எஜமானர் வீட்டிற்குத் திரும்பிப் போகும் பொழுதெல்லாம், அவர்கள் என்னே கோபித்துக் கொள்வார்கள், திட்டுவார்கள், செருப்பால் அடிப்பார்கள், உதைப்பார்கள் என்று என்மனதை சித்தப் படுத்திக் கொள் வேன் ; இதிலேதாவது குறைவுபட்டாலோ, என்பாக்கியம் என்று சந்தோஷப்படுவேன். அதெல்லாம் சரிதான்-ஆயினும் இந்த இழிகுலத்திற் பிறந்த பெண்ணே என்மகன் கலியாணம் செய்து கொண்டதை, என் ல்ை பொறுக்கமுடியவில்லை. நான் அவனுக்காகத் தீர்மானித்து வைத்திருந்த விவாஹம் இதனுல் தடை பெறுகிறது. ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/35&oldid=732152" இலிருந்து மீள்விக்கப்பட்டது