பக்கம்:The Knavery Of Kalappa.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-21 காளப்பன் கள்ளத்தனம் 33 வியாஜ்யம் நடத்த பீசு, வக்கீல் குமாஸ்தாவுக்கு செலவு, வக் கீல் ஆபீசு பையனுக்கு பத்யம் ; இந்த செலவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் ; வியாஜ்யம் சீக்கிரம் தீர்மானமாகுமா என்ன? தற்காலம் கோர்ட்டுகளில் நடக்கிா மாமூல்பிரகாரம்,எத் தனே வாய்தா விழும் என்று யோசித்துப் பாருங்கள், ஒவ் வொரு வாய்தாவுக்கும் கட்டைத் தூக்கிக்கொண்டு, வீட்டி லிருந்து வக்கீல் வீட்டிற்கும், அங்கிருந்து கோர்ட்டுக்கும், ஒடவேண்டியதுதான் ! இதன்றியும் வாய்தாவுக்கு வாய்தா சாட்சிக்காரர்களைச் சரிப்படுத்தவேண்டும். சாட்சிக் காார் காலில் விழுவதைவிட கட்சிக்காரன் காலில் விழலாம்” என்னும் பழமொழியைத் தாங்கள் கேட்டிருப்ர்ே. இவ்வளவு தொல் லேயும் கடந்து, தெய்வாதீனத்தால் வியாஜ்யம் எடுத்துக் கொள் ளப்பட்டால், உம்முடைய வக்கீல் வேறு கோர்ட்டில் வேலையா யிருப்பார் வியாஜ்யத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத தன் ஜூனியரை அனுப்பிவிடுவார். நியாபாதிபதி கேட்கும் கேள்வி களுக்கு பதில் உாைக்கத் தெரியாது அவர் விழிப்பார். கியா யாதிபதி உம்மைத் திட்டுவார், வக்கீலும் உம்மைத் திட்டுவார், வக்கீல் குமஸ்தாவும் உம்மால்தான் வியாஜ்யம் கெட்டுப்போய் விட்டது என்று உம்மை வைவார்! எதிராளியின் திட்டுக ளுடன் இவைகளையும் நீங்கள் பொறுக்க வேண்டும். இந்தக் கஷ்டமெல்லாம் அனுபவித்த பிறகு, கியாயாதிபதி எப்படி தீர்மானம் செய்கிருரோ யாருக்குத் தெரியும் அவர் லஞ்சம் வாங்குகிற ஆசாமியாயிருந்தால் உம்முடைய சரியான வியாஜ்யம் கூட அதோகதிதான் இல்லை. உங்களுக்கு அனு கூலமாகத் தெய்வாதீனத்தால் தீர்மானம் ஆச்சுதென்று வைத்துக் கொள்வோம், எதிரி அப்பீல் செய்வான் அல்லது உமக்கு விரோதமாகத் தீர்மானம் ஆணுல், நீங்கள் அப்பில் செய்யவேண்டும். உடனே, அடியைப் பிடியடாபாரதபட்டா' என்று, செலவும் கஷ்டமும் மறுபடியும் ஆரம்பமாக வேண்டி யதுதான்.முதல் அப்பீல், இரண்டாவது அப்பீல், ஹைகோர்ட்டு ரிவிஷன், பிரிவிகெளன்சில் அப்பீல் இதெல்லாம் முடிவதற் குள்ளாக மூன்றுதலே முறை ஆகிவிடும் ! ஐயா ! இந்த யமவே தனயினின்றும் எப்படியாவது நீர் தப்பித்துக் கொள்ளும், கோர்ட்டுக்குப் போவதைவிட, காகத்திற்குப் போகலாம். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/39&oldid=732156" இலிருந்து மீள்விக்கப்பட்டது