பக்கம்:The Wedding of Valli.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளி மண ம் அங்கம்-1) ஹா! சாதா! நாதா -இது கனவல்லவே கனவல்லவே ? இல்லை கண்மணி ! இனி உன் கவலை யெல்லாம் ஒழிவா யாக!-வேடுவணுக அன்று வந்து உன் மனதைக் கலக்கின வனும், சற்று முன்பாக வயோகிகளுக வந்து உன்னைக் கஷ்டத்திற் குள்ளாக்கினவனும் நானே ! (அவர் பாதத்தில் வீழ்த்து) நாதா நாதா! நான் என்ன வென்று உமது மன்னிப்பைக் கேட்பேன் பேதையாகிய நான் உமது பெருமை அறியாது அக் கோலங்களில் நீர் வந்த பொழுது, ஏதோ அாஷணமாக மொழிந்திருப்பேன். அவைகளை யெல்லாம் தாம் தம்முடைய பேரன்பால் மன்னித் தருளவேண்டும். (வாரி எடுத்து மார்புடன் அனைத்து) கண்மணி! இவைகளை யெல்லாம் நான் பூஷணமாகக் கொண்டேன். நீ அச்சமயங் களில் கூறிய மொழிகளெல்லாம் உனக்கு என் மீது உண்மை யில் உள்ள கழிபெருங் காதலேக் காட்டின வல்லவோ ? ஆகவே அவைகளுக்காக நான் மிகுந்த சந்தோஷமல்லவோ படவேண்டும்? அப்படி சந்தோஷப்பட வேண்டுமென்றே அவ்வேடங்களைத் தரித்தேனன்ருே ? ஆனல்-காதா-என்மீது உமக்குக் கொஞ்சமேலும் கோப மில்லையே? கொஞ்சமேனும் கோபமில்லை கண்மணி? ஆனல் என்னே மன்னித்தது உண்மைதானே ? சத்தியம்-இன்னும் உனக்கேன் சந்தேகம்? நாகா, இவ்வாறு கூறுவதற்காக அடியாளே மன்னிக்க வேண் டும். எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகமாயிருக்கிறது. அதை நிவர்த்திக்கும் மார்க்கம் தாம்தான் அறியவேண்டும். (முத்தமிட்டு) இப்பொழுது சந்தேகம் எல்லாம் போய்விட் டதா? போய்விட்டது பிரணவாதா 1-ஆனல்-ஆளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/65&oldid=732336" இலிருந்து மீள்விக்கப்பட்டது