பக்கம்:The Wedding of Valli.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-8) வள்ளி மண ம் 61 என்ன கண்மணி P-கான்னே எதோ கேட்க விரும்புகிருய் -தாராளமாய்க் கேள். எனக்கு வெட்கமா யிருக்கிறது-நாதா ! என்னேக் கேட்பதற்கு வெட்கமென்ன? சங்கோசமின்றிக் கேள். ஆளுல்-பிராணநாதா, என்ன இப்படியே உம்முடன் அழைத்துச் செல்லும் இட்சணமே பிராணவாதா, உம் முடைய கேஜோ ரூபமான திவ்ய தர்சனம் கிடைத்து, உமது வாயால் காதலி என்றழைக்கப்பெற்று, உம்முடைய அதாாமிர்தத்தைப் பருகியபின் உம்மைவிட்டு அரைக் கண மும் இனி பிரித்திருக்க என்னல் முடியாது. கண்மணி, நான் சொல்வதைக் கேள். உன்னே அழைத்துச் செல்ல இது சமயம் அன்று நீ உன் தந்தையின் விட்டிற் குப் போய் வாழ்ந்திரு. கூடிய சீக்கிரத்தில் நான் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன். பிராணகாதா, உம்முடைய உத்தரவுபடியே, ஆயினும் தாம தம் செய்யாதீர், கூடிய சீக்கிரத்தில் என்னே அழைத்துச் செல்லவேண்டும்; இல்லாவிடின் நான் ஆவி தரியேன். அப்படியே கண்மணி ! (மறைகிருர் ) காட்சி முடிகிறது. -<c::Qచి-- எட்டாம் காட்சி இடம்-கழுகுமலைக்குப் போகும் வழி. வாத்யகோஷம் முன் செல்ல, ஒரு வேடன் தினைக்காவடி எடுத்துக்கொண்டு ஆடிக்கொண்டு வருகிருன் நம்பிராஜனும், அவன் ஏழு மைந்தர்களும், வருகிருர்கள். வேடர்கள் புடை சூழ்ந்து அசோஹரா வேலும் மயிலும் துணை என்று கூவிக்கொண்டு வருகின்றனர். என்னடா காவடி கிற்கிறது சீக்கிரம் போகவேண்டும் -தாழியாய்விட்டது. மு. மை. அண்ணு கொஞ்சம் பொறுங்கள். ஆவேசம் வருகிரும் போலிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/66&oldid=732337" இலிருந்து மீள்விக்கப்பட்டது