பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H2 தே. தே. 轰。 தே. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து இப்படி எல்லாம் பேசாதே குழந்தை! இவர் ஒரு பெரிய வயித்தியர். ஜமீன்தார் இவரை அனுப்பியிருக்கிருர், உன் வியாதியை சுவஸ்தப்படுத்த. அப்படியா! எவ்வளவு ஆச்சரியம்! குழந்தை கொஞ்சம் சும்மா இரு இந்த வியாதி இவளுக்குக் கண்டது முதல் இப்படித்தான் பேசுகிருள் இவள். - அது முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம். ஏனென்ருல் இந்தஜூாம் நரம்பைப் போய் பற்றியிருக்கிறது என்று இது தெரிவிக்கிறது. இருந்தபோதிலும் நீங்கள் பயப்படவேண்டிய தில்லை. எங்கள் பாட்டனருக்குத் தகப்பனர், பழனிமலையி லிருந்த ஒரு சன்யாசியிடமிருந்து ரகசியமாய்த் தெரிந்து கொண்ட ஒரு அபூர்வமான மாத்திரை ஒன்று இருக்கிறது. நவரத்தினங்களின் சாரம், பொன், வெள்ளி, இன்னும் நூற்று எட்டு காட்டு மூலிகைகள், எல்லாம் சேர்த்து அதைச்செய்ய வேண்டி யிருக்கிறது. உங்கள் அதிர்ஷ்டம் அவைகள் எல் லாம் என் வீட்டில் சேகரித்து வைத்திருக்கிறேன். இந்த முண்டமங்கலம் ராஜா ஐயாயிரம் ரூபாய் கொடுத்து தனக்காக அந்த மாத்திரையைச் செய்யச் சொன்னர். அவ்வளவு செலவாகுமா அதற்கு ? ஏ ! உங்களுக்கு அதைப்பற்றி என்ன ? உங்களிடமிருந்து நான் காசா வாங்கப்போகிறேன். ஜமீன்தாருக்கும் எனக்கும் உள்ள சினேகத்திற்காக இதைச் செய்கிறேன். நான் உங்க ளிடத்தில் ஏதோ பணம் கேட்டதாக அவருக்குத் தெரியவர் தால் அவர் கோபித்துக்கொள்வார். நான் அந்த மாத்திரை களைத் தயார் செய்து நாளை காலே இரண்டு அனுப்புகிறேன். காலையில் ஒரு மாத்திரை, சாயங்காலம் ஒரு மாத்திரை தேனில் கலந்து சாப்பிடவேண்டும். இரண்டு மாத்திரை சாப்பிட்டால் போதும். உங்கள் மாத்திரைகளை-என் தகப்பணுருக்கு ஒன்றும், என் தாயாருக்கு ஒன்றும் கொடும். அவர்கள் எதை வேண்டு மென்ருலும் விழுங்கி விடுவார்கள். குழந்தை, பேசாமலிருக்கமாட்டாய் நீ! பரம்பரையாக வந்த பிரபலமான ஒரு வயித்தியர் காசு ஒன்றும் வாங்காமல் உன்னே சுவஸ்தப்படுத்துகிறேன் என்கிருர்! நீ அவரை வைகிருய் !