உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம் பேச்சு:இதயத்தின் கட்டளை.pdf/134

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

raw image

[தொகு]

@Info-farmer: raw imageஇல் எழுத்துக்களும் உள்ளது. அதனால் raw image வார்ப்புரு சேர்த்துவிட்டு மஞ்சள் ஆக்க வேண்டாம். வேண்டுமானால் நீலம் ஆக்கலாம். படத்தின் கீழே வரும் எழுத்துக்கள் தட்டச்சு செய்யப் பட வேண்டும். -- Balajijagadesh (பேச்சு) 04:12, 18 மார்ச் 2021 (UTC)

நிறவேறுபாடுகள் பல்வேறு பங்களிப்பாளர்கள் பங்களிக்கும் பொழுது, மெய்ப்பு நிலைகளை உணர்த்துவது சிறப்பு எனினும், மேலும் ஒரு சில நிறங்கள் இருத்தல் நலம். எடுத்துக்காட்டாக, நீல நிறத்தினை எழுத்துப்பிழை இல்லாத பக்கங்களுக்கு பயன்படுத்தலாமென்று எண்ணுகிறேன். ஏனெனில், எழுத்துப்பிழைகளையும், விக்கிக்குறியீடுகளையும் இடுவதற்கு புதியவர் பலர் அயர்ச்சியுறுகின்றனர்.
படத்தினைப் பொறுத்தவரை உரையில்லா படவெட்டுக்கருவி பகுப்புடன் இட இயலாத காரணத்தால் இதனைப் பயன்படுத்துகிறேன். commons crop tool கொண்டு படங்களை பொதுவகத்தில் ஏற்றலாமென்று எண்ணுகிறேன். அதனை நான் இன்னும் பயன்படுத்தியதில்லை. டெலிகிராம் குழுவில் இதுகுறித்த உங்கள் செய்தியைப் பார்த்தேன். அதற்குரிய வழிகாட்டுதல் பதிவு ஒன்று உருவாக்கித் தாருங்கள். பல படங்கள் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றன.
நாம் 10,000 பக்கங்களை விரைந்து மஞ்சளாக்கினால் இந்திய அளவில் முதல் ஒரு இலட்சம் அடைந்த சமூகம் நம் தமிழ் விக்கிமூலமாக இருக்கும் என்பதே நோக்கம். நிச்சயம் தவறாமல், raw image பகுப்பில் மேம்பாடு செய்வேன். ஒரு பகுப்பில் இருந்தால் தான் அதனை எடுத்து மேம்பாடு செய்ய இயலும். அதுவரை பொறுக்கவும். ஏனெனில் இருப்பதை வைத்து தானே இலக்கினை அடைய இயலும் என்பதே எனது வேண்டுகோள்.--தகவலுழவன் (பேச்சு). 06:26, 18 மார்ச் 2021 (UTC)
@Info-farmer: விரைவில் செய்கிறேன்.--Balajijagadesh (பேச்சு) 05:20, 21 மார்ச் 2021 (UTC)
@Balajijagadesh:// raw imageஇல் எழுத்துக்களும் உள்ளது.//படவுரை தரப்படலாம் என்றே இந்த வார்ப்புரு ஆவணத்தில் உள்ளது. அதோடு மேற்கூறிய எனது எண்ணங்களும் கருத்திற் கொள்ளக்கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 02:49, 21 மார்ச் 2021 (UTC)
@Info-farmer: //படவுரை தரப்படலாம் என்றே இந்த வார்ப்புரு ஆவணத்தில் உள்ளது.// உரைகள் படவுருவில் இருந்து எழுத்துக்களாக மாற்றாமல் 'மெய்ப்பு பார்க்கப்பட்டது' என்று குறிக்கப்பட்டால் அது சரியாக இருக்காது. அதனால் இப்பக்கத்தினை சிவப்பாகவோ அல்லது நீலமாகவோ மாற்றினால் சிறப்பு-- Balajijagadesh (பேச்சு) 05:20, 21 மார்ச் 2021 (UTC)
@Balajijagadesh:பல படங்கள் இப்பகுப்பில் இருக்கும் பொழுது, ஒரு படத்தினைப் புரிந்து கொள்ள படவுரை உதவும். அதனை இரண்டாம் முறையும் ஏன் குறிப்பிட வேண்டும். //அது சரியாக இருக்காது.// என்றால் எப்படி? ஏன் பொருத்தமற்றது ? பல பக்கங்கள் அதுபோல ஏற்கனவே உள்ளனவே. அந்நிறத்தினை நீங்கள் எந்த அடிப்படையில் பரிந்துரை செய்கிறீர்கள்? மஞ்சளாக மாற்றுவதால் என்ன இழப்பு ஏற்படும்?--தகவலுழவன் (பேச்சு). 07:41, 21 மார்ச் 2021 (UTC)
@Info-farmer: படத்திலேயே உரை உள்ளது என்றால் மெய்ப்பு செய்வதே தேவையில்லாத வேலை. -- Balajijagadesh (பேச்சு) 15:48, 21 மார்ச் 2021 (UTC)
சரி ஏழாயிரம் பக்கங்களை மஞ்சளாக்கினால் இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழி முதல் ஒரு இலட்சம் பக்கங்களை மஞ்சளாக்கிய இலக்கை நாம் அடைவோம் அதற்கு இப்படப்பக்கங்களை மஞ்சளாக்கலாம் என எண்ணுகிறேன் உங்களின் கருத்தென்ன?--தகவலுழவன் (பேச்சு). 02:26, 22 மார்ச் 2021 (UTC)
@Info-farmer: ஆங்கில விக்கிமூலத்தில் raw image சேர்க்கப்பட்ட பக்கங்களை நீல நிறத்தில் குறிக்கப்படுகிறது. பன்னாட்டு விக்கிமூலங்களிலும் இந்நடைமுறையே பின்பற்றப் படுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 03:34, 22 மார்ச் 2021 (UTC)
அப்படியெனில், ஒரு படமுள்ள பக்கத்தினை மஞ்சளாக்க என்ன செய்யணும்? ஏற்கனவே உள்ளதை என்ன செய்யணும்? நுட்ப அளவிலும், பங்களிப்பாளர் அளவிலும் குறைவாக உள்ள நாம், நமக்குரிய வழிமுறைகளை உருவாக்குதல் நலம். நாட்டுடைமை நூல்கள் திட்டம் எந்த மொழியிலும் இல்லாத் திட்டம். அதற்கு எழுத்துணரியாக்கம் செய்ததும் எம்மொழியிலும் இல்லாத சூழலில் நமக்கு நாமே உருவாக்கிய வழிமுறைகள். எனவே நமக்குரிய வழிமுறை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மஞ்சளாக்கினால் நமக்கு என்ன இடர்? நீலமாக்கினால் என்ன பலன்?--தகவலுழவன் (பேச்சு). 05:22, 22 மார்ச் 2021 (UTC)
@Info-farmer: pdf கோப்பிலிருந்து படத்தை தனியாக, சரியான அளவில் வெட்டி பொதுவகத்தில் பதிவேற்றி, அக்கோப்பை இணைத்தால் மஞ்சள் செய்யலாம். raw image template உள்ள பக்கங்கள் மஞ்சள் செய்வது சரியன்று. மேலும் நாட்டுடைமை நூல்களில் உரைகள் மட்டுமே நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளது. படங்கள் நாட்டுடைமை செய்யப்படவில்லை. நாட்டுடைமை நால்களின் படங்களை தனியாக பதிவேற்றினால் அப்படங்கள் நீக்கப்படும். மேலும் படம் உள்ள நூலும் முழுமையாக நீக்கப்படும். அதனால் crop image மூலம் crop செய்வது மட்டும் இப்பொழுதுக்கு சரியான முறையாக இருக்கும். நாட்டுடைமை இல்லாத காப்புரிமை முடிந்த நூல்களில் படங்களை தனியாக பொதுவகத்தில் பதிவேற்றம் செய்து மெய்ப்பு செய்யலாம். -- Balajijagadesh (பேச்சு) 03:35, 23 மார்ச் 2021 (UTC)

raw image தொடர்ச்சி...

[தொகு]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── @Balajijagadesh: சரி. காப்புரிமை சிக்கலை OTRS கொண்டு தீர்க்கலாம் அதுகுறித்து பின்னர் தொடர்வோம். பல படங்கள், raw image பகுப்பில் மஞ்சள் பக்கங்களாக உள்ளன. அவற்றை என்ன செய்யலாம்? மேலும் பலபடங்களுக்கு இவ்வளவு முன்னெடுப்புகள் செய்யவேண்டுமா என்றே எண்ணுகிறேன். பல மூலபக்கத்திலேயே தெளிவாக இல்லை. அதனை சீரமைப்பது தேவையா? விக்கிமூலத் திட்டத்தில், மூல ஆவணங்களை காப்பது தானே நமது நோக்கம். எனவே, தெளிவற்றப் பக்கங்களுக்கும், உரையற்றப் பக்கங்களுக்கும் மஞ்சள் நிறமிட்டு,தேவையான படங்களுக்கு நீலநிறமாக மாற்றினால், பின்னால் அவற்றை தனியே நீங்கள் கூறியவழிகாட்டுதல்களை பின்பற்ற விருப்பம்--தகவலுழவன் (பேச்சு). 03:57, 23 மார்ச் 2021 (UTC)

@Info-farmer: உரையற்ற தெளிவற்ற படங்களுக்கு {{raw image}} இடத் தேவையில்லை. நேரடியாக நூலின் முதல் பக்கத்திற்கு இருப்பது போன்று இட்டுவிட்டு மஞ்சள் பச்சையாக்கலாம். நாட்டுடைமை நூல்களின் பட காப்புரிமை சிக்கலை OTRS மூலம் தீர்க்க முடியாது. ஏன் என்றால் நாட்டுடைமை செய்யும் பொழுது ஓவியர்களுக்கு பணம் ஏதும் கொடுக்கப்படவில்லை. பதிப்பாளர்களுக்கும் பணம் கொடுக்கப்படவில்லை. வெறும் எழுத்துக்கு மட்டுமே உரிமையுள்ளது. சரியாக செய்யவேண்டும் என்றால் மூலக்கோப்பில் உள்ள படங்களையெல்லாம் redact செய்து பதிவேற்ற வேண்டும். -- Balajijagadesh (பேச்சு) 05:56, 27 மார்ச் 2021 (UTC)

அநேகமாக அனைத்துக் கூறுகளையும் நாம் ஆய்ந்து விட்டோம். மேற்கூறிய இருநிற பயன்பாடுகளைப் பயன்படுத்துதல் நம்மைப் போன்ற திறன்குறைந்த சமூகத்திற்கு நல்லது என்றே எண்ணுகிறேன். உங்களின் இறுதி முடிவு இதுகுறித்து அறிய ஆவல்--தகவலுழவன் (பேச்சு). 03:49, 25 மார்ச் 2021 (UTC)

@Balajijagadesh: பக்கம்:திருவாசகத்தேன்.pdf/194 CSS crop image உள்ள, இப்பக்கம் சரியா?--தகவலுழவன் (பேச்சு). 02:58, 27 மார்ச் 2021 (UTC)

@Info-farmer: நாட்டுடைமை நூல்களுக்கு வேறு வழியில்லை. அதனால் மேலே குறிப்பிட்டுள்ள படம் சரி என்று கருதுகிறேன். -- 05:52, 27 மார்ச் 2021 (UTC)
@Balajijagadesh: // நேரடியாக நூலின் முதல் பக்கத்திற்கு இருப்பது போன்று இட்டுவிட்டு மஞ்சள் பச்சையாக்கலாம். // ஏதாவது ஒரு பக்கத்தினை மஞ்சளாக்கிக் காட்டவும். அதனை மாதிரியாகக் கொண்டு பயணிக்கிறேன். நீங்கள் முன்பு கூறியது போல பச்சையாக்குவதில் நான் முனைப்பு காட்டாமல் மஞ்சளாக்கவே அதிக பக்கங்களை செய்ய வேண்டுமென எண்ணுகிறேன்--தகவலுழவன் (பேச்சு). 13:41, 28 மார்ச் 2021 (UTC)
பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/163 , பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/164 என்பது கையெழுத்து ஆவணம் இதனை மாதிரியாக செய்து தாருங்கள்--தகவலுழவன் (பேச்சு). 02:17, 30 மார்ச் 2021 (UTC)
அட்டவணை:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf என்ற நூலில், உங்கள் வழிகாட்டுதல் தரும்வரை கத்திரிப்பூ நிறத்திற்கு மாற்றியுள்ளேன். வழிகாட்டுதலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்--[[பயனர்:|தகவலுழவன்]] (பேச்சு). 02:37, 31 மார்ச் 2021 (UTC)
@Info-farmer: பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/121, பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/122 போன்ற பக்கங்களில் உள்ள படங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படங்கள். அதனால் அவை பொது களத்தில் உள்ளது. இப்படங்களை வெட்டி தனியாக பொதுவகத்தில் பதிவேற்றலாம். {{PD-India}} வார்ப்புருவை அவைகளுக்கு பயன்படுத்தலாம். பின்னர் அப்படத்தை இணைத்து மஞ்சளாக்கலாம். -- Balajijagadesh (பேச்சு) 03:41, 5 ஏப்ரல் 2021 (UTC)
தெளிவான படங்களுக்கு அதுபோல செய்வோம். அதற்கு commons image crop tool குறித்து படப்பதிவு ஒன்று செய்து தாருங்கள். தெளிவற்றப் படங்களுக்கு, (கீழுள்ள வினா) உங்கள் விடையை காண பல நாட்களாக ஆவலாக உள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 06:01, 5 ஏப்ரல் 2021 (UTC)

பொதுவகத்தில் பதிவேற்றுதலும், தெளிவற்றப் படங்களுக்கான முடிவு

[தொகு]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── @Balajijagadesh: உரையாடியபடி பல பக்கங்களை மஞ்சளாக மாற்றாமல், கத்திரிப்பூ (violet) நிறத்திற்கு மாற்றி வருகிறேன். காண்க: பகுப்பு:சிக்கலானவை எனினும், // நேரடியாக நூலின் முதல் பக்கத்திற்கு இருப்பது போன்று இட்டுவிட்டு மஞ்சள் பச்சையாக்கலாம். // என்ற கூற்றுக்கு ஏற்ப, ஏதாவது ஒரு பக்கத்தினை மஞ்சளாக்கிக் காட்டவும். அதனை மாதிரியாகக் கொண்டு பயணிக்கிறேன். அல்லது பிறரிடம் இந்நுட்பம் குறித்து கேட்கலாமா?--தகவலுழவன் (பேச்சு). 03:34, 5 ஏப்ரல் 2021 (UTC)

இத்தகைய சிக்கல் உள்ள பக்கங்கள் குறித்து சண்முகம் விக்கி கலந்துரையாடலின்போது கூறியவற்றை நினைவில் கொள்ளவும். மேலும் உதவிக்கு பாலாஜி சரிசெய்துள்ள பக்கத்திருத்தங்களைக் காண்க. பக்கம்:ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் திவ்யசரிதம்.pdf/441 --TVA ARUN (பேச்சு) 07:40, 9 ஏப்ரல் 2021 (UTC)
நன்றி, அருண்! ஆம் நான் தான் சண்முகத்திடம் கேட்டிருந்தேன். சில வருடங்கள் கடந்துவிட்டமையால் மறந்துவிட்டேன். பகுப்பு:சிக்கலானவை என்ற பகுப்பில் தேவையான பக்கங்களில் பயன்படுத்துவேன்.CropImage கருவிப்படங்களுக்கும், தானியங்கி அல்லது அக்கருவியின் வார்ப்புருவினுள் இயல்பிருப்பான பகுப்பிட முனைவேன் --தகவலுழவன் (பேச்சு). 17:17, 9 ஏப்ரல் 2021 (UTC)
நீங்கள் கூறியவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டேன். இருப்பினும், அது பொதுவகத்தில் பதிவேற்றுதலுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்களாகக் கொள்வேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:22, 13 ஏப்ரல் 2021 (UTC)

தெளிவற்றப் படங்களுக்கு

[தொகு]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── @Balajijagadesh, TVA ARUN:

  • பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/299 என்ற பக்கத்தினை, தெளிவற்றப் படங்களுக்கான எடுத்துக்காட்டாகக் கொள்வோம். ஏனெனில், அதனை அப்பக்கத்தில் இருந்து, இங்குள்ள அல்லது பொதுவகத்தில் உள்ள படவடித்தெடுத்தல் கருவி வழியே (By the crop tool) செய்தல் வேண்டாமென்றே கருதுகிறேன். காரணம், தெளிவற்ற படங்களுக்கு பங்களிப்பு நேரத்தினை செலவிடுதல் உகப்பன்று. தெளிவற்றப் படத்தில் படவுரை இருப்பின், அதனை எழுதிய பின்பே, மஞ்சளாக்கலாமென்றே எண்ணுகிறேன். தெளிவான படங்களுக்கு, பொதுவகத்தில் பாலாஜி செய்தது போல, அங்குள்ள கருவியைக் கொண்டு பதிவேற்ற விருப்பம். தெளிவற்ற சிறுபடங்களுக்கு, இங்குள்ள படவடித்தெடுத்தல் கருவியை(css crop tool) பயன்படுத்த எண்ணுகிறேன். உங்கள் இருவரின் கருத்தினைத் தெரியப்படுத்தவும்.--தகவலுழவன் (பேச்சு). 03:22, 13 ஏப்ரல் 2021 (UTC)
  • அட்டவணை:ரமண மகரிஷி.pdf என்ற நூலில், பக்கம் 107 முதல் 122 வரை தெளிவற்றப் படங்கள் உள்ளன. படவணு(px)க்களின் அளவை மாற்றுவதால் ஓரளவு தெளிவாக தெரியும் படி செய்துள்ளேன். பாலாஜி கூறியது போல, காப்புரிமை இடர்கள் இருப்பதால், அவற்றை பொதுவகத்தில் ஏற்றுவது பொருத்தமன்று. மேலும், அவை தெளிவான படங்களாக இல்லை. கண்டு, கருத்திடவும். இவற்றை மாதிரியாகக் கொண்டு, பிறரையும் செயற்பட வழிகாட்டலாம்.--தகவலுழவன் (பேச்சு). 03:40, 15 ஏப்ரல் 2021 (UTC)