பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/232

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

புத்த மதத்தினருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இந்துமத ஆர்வலர்கள் புத்த மதத்தை எதிர்ப்பதில்லை. ஏன்? திராவிடர் கழகம் சாதி ஆதிக்கங்களை எதிப்பதைப்போல் புத்தமதம் எதிர்ப்பதில்லை. பொதுவுடைமைக் கொள்கையினர் சுரண்டலை எதிர்ப்பதைப்போல புத்தமதம் எதிர்ப்பதில்லை. அதனால் ஆதிக்கம் என்ற பேரில் சாதிகளையும் சுரண்டலையும் வளர்ப்பவர்கள் திராவிடர் கழகத்தையும் பொதுவுடைமைக்-