பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/120

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

நற்றிணை - 278. நெய்தல்[தொகு]

 

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை  5
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்-
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.

 

அடுத்த மரலின் மொக்குகளைப் போலப் பொருந்திய வயிரம் விளங்கிய பருத்த அடியை உடைய புன்னை அரும்பு வாய் திறந்து மலரா நிற்ப. அங்ஙனம் மலர்ந்த பொன் போன்ற மகரந்தம் மிக்க பலவாகிய மலர்களில்; அணிந்து கொள்பவர் கொய்து தொடுத்தன போக எஞ்சியன; கிளைகள் தோறும் நெய் மிக்க பசிய காயாகத் தூங்கா நிற்கும்; கடல் துறையுடைய தலைவனை; கழிக்கரையில் உள்ள சேறுபட்ட திரண்ட காலையுடைய அவனது தேரிலே பூட்டிய கோவேறு கழுதையின் குளம்பினெங்கும் சிவந்த இறால் மீன்கள் ஒடுங்கப்பட்டு அழிந்தன; அவனது மாலையிலும் மற்றெவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய மணல் ஒடுங்கின; ஆதலின் நினக்கே கணவனாமாறு விரைவில் வந்தனன் போலும் என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்;

தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது. – உலோச்சனார்

உரை : நற்றிணை - 278