பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/170

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

திணைமொழி ஐம்பது : பாடல் 13[தொகு]

“ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்
 மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்
 கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்
 பொலந்தொடீஇ பொய்த்த குயில்.”

ஓங்கிய குருந்தோடே கூட அரும்புகளை ஈன்று பாங்கராகிய மராஅமரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக் கலந்து சென்ற நங்காதலர் வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின, குயில்கள்: பொலந்தொடீ!

காண்க : திணைமொழி ஐம்பது : பாடல் 13


பொன் வளையல் அணிந்தவளே! ஓங்கிய குருந்து அரும்பு விட்டிருக்கிறது. அதன் பக்கத்தில் மரா மரங்களும், தோன்றியும் இடையிடையே விரவி மலர்ந்திருக்கின்றன. என்னைத் தழுவிக் கலந்தவர் சென்று விட்டார். “பிரிய மாட்டேன்” என்று அவர் சொன்ன சொல் என்னவாயிற்று – என்று கேட்டுக் கொண்டு குயில்கள் கூவுகின்றன.

காண்க : தமிழ்த்துளி


13 பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

“ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்
 மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்
 கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்
 பொலந்தொடீஇ பொய்த்த குயில்”

வெப்பத்தைக் கக்கக் கூடிய சூரியனின் கதிர்களில் வேக வைக்கப்பட்ட வெப்பப் பகுதியாக பாலைவனப் பகுதிகள் விளங்கும்.

கடும் வெப்பம் தாக்கும் போது தண்ணீர் இல்லாமல் எங்கும் வறண்டு காணப்படும். அந்த சமயம், தாவரங்கள் எல்லாம் வாடிப் போயிருக்கும். நீர் நிலையைப் பிரிந்த நிலம் எவ்வாறு வாடியிருக்குமோ அதைப் போல பாலைவனப் பகுதியில், பிரிந்து சென்ற தலைவனால் தலைவியின் உள்ளமும் வாடியிருக்கும்.

இதனால்தான் அறிவில் சிறந்த சான்றோர்கள் பிரிதலையும், பிரிதல் நிமித்தத்தையும் பாலைவனத் திணையாக வகுத்து இருக்கின்றார்கள். இந்தக் காலம் காதலனும், காதலியும் ஒன்றிணைவதற்கான தட்பவெப்ப நிலையும் அமைந்திருப்பதில்லை.

எனவே, இவர்கள் பிரிந்தனரோ என்ற சொல்லவும் முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், பொருள் தேடிச் சென்ற தலைவனின் துன்பம் தாங்க முடியாமல் தலைவி வருந்துகிறாள். அவளுடைய துன்பத்தின் மேலோட்டமான பகுதியைத் தோழிக்கு எடுத்துக் கூறுகிறாள். அவ்வாறு சொல்லக் கூடிய பாடலாக இந்தச் செய்யுள் அமைந்துள்ளது.

தங்கத்தினால் செய்யப்பட்ட கலையம்சம் மிக்க வளையல்களை அணிந்திருக்கின்ற என் அன்புக்குரிய தோழியே, மராமரங்களைச் சூழ்ந்து உயர்ந்து வளர்ந்திருக்கும் குறுந்த மரங்களும் காணப்படுகின்றன. அவற்றுக்கிடையே பல்வேறு அரும்புகளும் தோன்றி, பார்க்க இனிமையாக வளர்ந்து காணப்படுகின்றன. சில அரும்புகள் புதிது புதிதாக மலர்ந்து கொண்டும் இருக்கின்றன. இவ்வாறு வெப்பக் காலத்தில் கூட சில மலர்கள் மலர்கின்றன. ஆனால், என் தலைவன் என்னை விட்டுப் பிரிந்து சென்றதால், என் உள்ளத்தில் எந்த மலர்ச்சியும் தோன்றவில்லை.

என்னைப் பிரிந்து சென்றவன், என்னைப் புரிந்து சென்றானா என்று தெரியவில்லை. அவன் செல்லும் போது சொன்ன உறுதி மொழிகள் எல்லாம் உறுதியிழந்து நிற்கின்றன. வேனிற்காலம் வரவுள்ளது. அந்தப் பருவம் வருவதைக் கண்டு குயில்கள் கூவிக் கொண்டு இருக்கின்றன. அந்த ஓசை அனைத்தையும் பொய்யாக்கி விட்டது. எனவே, இப்போது இருக்கும் இளவேனிற் பருவத்தைக் கண்டு என் மனம் வருந்துகிறது என்று தோழியிடம், தன் மன வருத்தத்தைத் தலைவி கூறுகிறாள்.

காண்க : ஆழ்வார்கள் ஆய்வு மையம்