பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/49

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

நூல் ஒருங்கிணைப்பு[தொகு]

நான் சில காலம் என் தந்தையாரின் அச்சகத்தில் பணியாற்றியமையால், இந்த 73-4 என்பதற்குப் பொருள் தெரியும். வழமையாக அச்சிடும் புத்தகங்கள் 8 அல்லது 16 பக்கங்களாக அச்சிடுவர். இவற்றுக்கு ஃபாரம் (Form) என்று பெயர். முதல் ஃபாரம் புத்தகத்தின் முதல் எட்டு அல்லது பதினாறு பக்கங்களைக் கொண்டிருக்கும். அடுத்த எட்டு அல்லது பதினாறு பக்கங்கள் இரண்டாம் ஃபாரம்.

புத்தகத்தை ஒருங்கிணைப்பவர் முன்பு, ஒன்றாம் பாரத்தில் இருந்து வரிசையாக ஃபாரங்கள் முறைப்படி அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்கில் இருந்தும் ஒரு ஃபாரம் எடுத்து புத்தகத்தை ஒருங்கிணைப்பார்.

இது 49ம் பக்கம் என்பதால் நான்காம் ஃபாரம்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 09:40, 30 சனவரி 2023 (UTC)