பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/697

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

ஐங்குறுநூறு பாடல் 259[தொகு]

சங்கச் சோலை விளக்கம் [தொகு]

குன்ற குறவன் காதல் மட_மகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலைஉறை கடவுள் குலமுதல் வழுத்தி
தேம்பலி செய்த ஈர்நறும் கையள்
மலர்ந்த காந்தள் நாறி5
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே

விளக்கம் : குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள் ஊர்ப் பொதுவில் உள்ள வேங்கை மரத்தின் மலர்களில் சிலவற்றைக் கொண்டு, மலையில் வாழும் கடவுளான தங்களின் குல தெய்வத்தை வாழ்த்தி, இனிய பலியுணவைப் படைத்த ஈரமுள்ள நறிய கையினையுடையவள், மலர்ந்த காந்தளைப் போல மணம் வீசி, கலங்கி அழும் கண்களையுடையவள் என்னைப் பெரிதும் வருத்தியவள்.

மூலம் : ஐங்குறுநூறு : 259

தமிழ் கற்போம் விளக்கம் [தொகு]

ஐங்குறுநூறு 259, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது

Ainkurunūru 259, Kapilar, Kurinji Thinai – What the hero said The mountain dweller’s beloved delicate daughter makes sweet offerings of flowers from vēngai trees in the common grounds, with her wet, fragrant hands, to the ancient clan deity who resides in the mountains.

She is fragrant like a kānthal blossom, the teary-eyed woman who afflicts me.

Notes: The hero sends his family elders to the heroine’s family with a marriage proposal. Her family rejects their proposal. The heroine is very sad. She prays to god at night. The hero comes there. He utters these words on seeing the heroine. குலமுதல் வழுத்தி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குலதெய்வத்தை வாழ்த்தி, ஒளவை துரைசாமி உரை – முதற் பொருளாகிய இறைவனை வழிபட்டு. ஈர் நறுங்கையள் மலர்ந்த காந்தள் நாறிக் கலிழ்ந்த கண்ணள் (4-6) – தி. சதாசிவ ஐயர் – காந்தள் போலத் தோன்றிய ஈரிய நறிய கையையுடையாள் கலங்கிய கண்ணையுடையவளாய் வருந்துவாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நனைந்த நறிய கையையுடையவளாய் புதுவதாக மலர்ந்த காந்தட் பூவினது மணம் கமழ்ந்து கண்ணீர் உகுக்கின்ற கண்ணையுடையவளாய்த் தோன்ற என்பதாம். இலக்கணக் குறிப்பு: குலமுதல் – நான்காம் வேற்றுமைத் தொகை, தேம்பலி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை, கலிழ்ந்த – கலுழ்ந்த என்பதன் திரிபு, அணங்கியோளே – ஏகாரம் அசை நிலை, an expletive.

Meanings: குன்றக் குறவன் காதல் மடமகள் – The mountain dweller’s beloved delicate daughter, மன்ற வேங்கை மலர் – kino flowers in the town’s common ground, Kino Tree, Pterocarpus marsupium, சில கொண்டு – with a few, மலை உறை கடவுள் – god living in the mountains, குலமுதல் வழுத்தி – worshipping the ancient clan deity, தேம்பலி – sweet offerings, offerings of honey, செய்த – performed, ஈர் நறும் கையள் – the woman with wet fragrant hands, மலர்ந்த காந்தள் நாறி – appearing like open glory lilies, fragrant like glory lily flowers, கலிழ்ந்த கண்ணள் – the woman with teary eyes, எம் அணங்கியோளே – the young woman who afflicts me.

மூலம் : ஐங்குறுநூறு : 259

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 06:25, 24 மார்ச் 2023 (UTC)