பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/730

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

மூதுரை 12  : Mudurai 12[தொகு]

தாழை - மகிழம்பூ

“மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
 உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
 மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
 உண்ணீரு மாகி விடும்.”
(12)

மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம், உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.

தாழம்பூ பெரிய மடலாகப் பூத்திருக்கும். (அதன் மணத்தை எல்லாரும் விரும்புவதில்லை) மகிழம்பூ அளவில் சிறியது. இதன் மணம் நெடுந்தொலைவு வீசும். இதன் மணத்தை எல்லாரும் விரும்புவர். அது போல எவரையும் உடல் அளவைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. மேலும், கடல் மிகப் பெரியது. அதன் நீர் குளிப்பதற்குக் கூடப் பயன்படாது. அதன் அருகில் தோண்டிய சிறு ஊற்றில் (ஊறலில்) வரும் நீர் [குளிப்பதற்கு மட்டும் அன்றி,] பருகுவதற்கும் பயன்படும்.

மூலம் : மூதுரை 12

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 14:00, 25 மார்ச் 2023 (UTC)