உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டினத்தார் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து

பட்டினத்தார் பாடல்கள்

[தொகு]

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்

புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகை அறியீர்! கைவிடவும் மாட்டீர்!

கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் ! கிடந்துழல அகப்பட்டீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பட்டினத்தார்_பாடல்கள்&oldid=12169" இலிருந்து மீள்விக்கப்பட்டது