பயனர்:Balajijagadesh/மணல்தொட்டி/test

விக்கிமூலம் இலிருந்து



விடுகதை விளையாட்டு

1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன?

2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன?

3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை?

4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;
    விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.

5. தாளைக் கொடுத்தால் தின்னும்;
    தண்ணிர் குடித்தால் மடியும்.

6. சின்ன மச்சான் - என்னைக்
    குனிய வச்சான்.

7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்
    பார்க்க முடியவில்லை.

8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,
    ஆடை நெய்யும், தறியும் அல்ல.

9. சூடுபட்டுச் சிவந்தவன்,
    வீடுகட்ட உதவுவான்.

10. பட்டையைப் பட்டையை நீக்கி,
      பதினாறு பட்டையை நீக்கி,
      முத்துப் பட்டையை நீக்கி,
      முன்னே வாராள் சீமாட்டி.

11. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை.

12. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,
      உரிக்க உரிக்கத் தோலாண்டி.

13. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்;
      எவராலும் பார்க்க இயலாத கடிகாரம்.

14. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் புடவை.

15. காது பெரிசு; கேளாது,
      வாய் பெரிசு பேசாது,
      வயிறு பெரிசு உண்ணாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Balajijagadesh/மணல்தொட்டி/test&oldid=489555" இலிருந்து மீள்விக்கப்பட்டது