பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/அப்பா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf
அப்பா

கையிலே ஓர் குடை!
காலில் செருப்பு நடை!
மெய்யில் வெள்ளை உடை!
மெதுவாய்ப் போவார் கடை!

'அப்பா' அதற்கு விடை;
அம்மா சொல்வாள் தடை!
தப்பாமல் ஓர் வடை
தருவாள் முதுகில்; துடை;

பாடஞ் சொல்லச் செய்வார்!
படிக்கா விட்டால் வைவார்!
ஆடல் பாடல் சொல்வார்!
அன்பைக் காட்டி வெல்வார்!

வேண்டும் பொருளைச் சேர்ப்பார்!
வீட்டை என்றும் காப்பார்!
நீண்ட மீசைக் காரர்!
நம்மேல் ஆசைக் காரர்!

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf