பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/அம்மா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்மா!


அம்மா மிகவும் நல்லவள்!
ஆட்டித் துங்கச் செய்தவள்!

இளைக்கக் கண்டு அழுதவள்!
ஈயை ஓட்டி நின்றவள்

உழக்கு நெய்யைச் சோற்றிலே,
ஊற்றிப் பிசைந்து கொடுத்தவள்!

எடுத்துத் தூக்கி அணைத்தவள்!
ஏணை கட்டிப் போட்டவள்!

ஐயன் அப்பன் என்றவள்!
ஒளவைக் கதையைச் சொன்னவள்!

ஒப்ப னைகள் செய்தவள்!
ஓயா தென்னை காப்பவள்!


பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf