பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/ஆசை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdfஆசை

பாப்பா வுக்குப் பால் குடிக்கக்
கொள்ளை ஆசை - எங்கள்
பாட்டிக் கென்றும் கதை சொல்லக்
கொள்ளை ஆசை

அம்மா வுக்குப் புடவை மேலே
கொள்ளை ஆசை - எங்கள்
அப்பா வுக்கு மீசை மேலே
கொள்ளை ஆசை

தாத்தா வுக்குப் பேரன் மேலே
கொள்ளை ஆசை - இந்தத்
தங்கைக் கென்றும் பாட்டுப் பாடக்
கொள்ளை ஆசை

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf