பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/உடற்பயிற்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உடற்பயிற்சி


ஒன்று இரண்டு சொல்லுங்கள்!
ஓடி வந்து நில்லுங்கள்

மூன்று நான்கு எண்ணுங்கள்!
முதுகை ஒட்டப் பண்ணுங்கள்

ஐந்து ஆறு கூறுங்கள்
அரசக் குதிரை ஏறுங்கள்!

ஏழு எட்டு கொட்டுங்கள்!
எல்லாம் கையைத் தட்டுங்கள்!

ஒன்பது பத்து சொல்லுங்கள்!
உடலை நிமிர்த்தி நில்லுங்கள்!

கைகளை மேலே தூக்குங்கள்!
கால்களை அகற்றி வையுங்கள்!

பக்கவாட்டில் சாயுங்கள்!
பாதந்தொட்டுக் குனியுங்கள்!

முன்னும் பின்னும் சாயுங்கள்!
முதுகுப் பக்கம் வளையுங்கள்!

மூச்சை இழுத்து வாங்குங்கள்!
முப்பது வரையில் அடக்குங்கள்!

அடக்கிய மூச்சை அகற்றுங்கள்;
அகன்ற மார்பைச் சுருக்குங்கள்!

கழுத்துப் பயிற்சி செய்யுங்கள்!
கால்களை மாற்றிக் குதியுங்கள்!

விளையாட் டெல்லாம் முடிந்ததும்
வீட்டை நோக்கிச் செல்லுங்கள்!


பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf