பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/ஊஞ்சல் ஆடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf


ஊஞ்சல் ஆடு!


ஆடு ஊஞ்சல் ஆடு!
அன்னைத் தமிழ் பாடு!
பாடுபவள் காதிரண்டில்
பச்சைமணித் தோடு!

காற்றில் முடி ஆட,
கைவளைகள் பாட
ஆற்றில் அலை பாய்வதுபோல்
அங்கு மிங்கும் ஓட,
ஆடு ஊஞ்சல் ஆடு

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf