பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/குழந்தை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdfகுழந்தை!

குழந்தை இங்கே வா!
கொஞ்சி முத்தம் தா!

பாலுஞ் சோறும் உண்ணு!
பத்து வரையில் எண்ணு!

அஆ இஈ என்றே
அப்பா வந்தால் சொல்லு!

பட்டுச் சட்டை தைப்பார்!
பதக்கம் வாங்கி வைப்பார்!

முத்துப் பல்லைக் காட்டு!
முன்னங் கையை நீட்டு

சோற்றை வாயில் போடு!
சுவையாய்ப் பாடி ஆடு

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf