பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/நாய்க்குட்டி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நாய்க்குட்டி!


நாய்க்குட்டி நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி!
தாய்க்கு நல்ல நாய்க்குட்டி!
தவறு செய்யா நாய்க்குட்டி!

எங்களோடு விளையாடும்;
இனிமையாகப் பழகிடும்!
அங்கும் மிங்கும் ஓடிடும்;
அழகு மிகுந்த நாய்க்குட்டி!

மொசுமொசுவென் றுடலிலே
முடிகள் தோய்ந்த நாய்க்குட்டி
கிசுகிசுக்கும் காதிலே!
கீழும் மேலும் பாய்ந்திடும்!

பாப்பா வோடு பழகிடும்!
பந்து போட்டால் பிடித்திடும்!
காப்பாய் எங்கட் கிருந்திடும்!
காதுநீண்ட நாய்க்குட்டி!


பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf