பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/நாள் ஒழுக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf
நாள் ஒழுக்கம்!


கதிருக்கு முன்னெழு!
கடமைகள் வரிசை செய்!
நூலொடு தொடர்பு கொள்!
நோதவிர் பயிற்சி செய்!
மயக்கிலா உண்டி கொள்!
மாண்பொடு பள்ளி செல்!

ஆசிரியர்த் தழுவு!
அன்பரில் நண்பு தேர்!
கல்கேள் பட்டறி!
கரவிலா உறவு கொள்!
மாலை உடல் பயில்!
மறாமல் கல்வி தேர்!

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf

இரவூண் குறைத்துண்!
எதிரிரா விழித்திரேல்!
என்றும் தனிப்படு!
இடக்கைப் புறந்துயில்!
பெரியோர் வழித்தொடர்!
பெற்றவர் மகிழ்வு செய்!