பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/பாதையில் நடத்தல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாதையில் நடத்தல்


எப்பொழுதும் பாதையில்
இடது பக்கம் நடந்து போ!
தப்பில் லாமல் நடப்பதால்,
தடைகள் வாய்ப்ப தில்லையே!

நடந்து போகும் மேடையில்
நடந்து செல்லல் நல்லது!
கடந்து போக, இரு புறம்
கவனி; பின்பு விரைந்து போ!

படித்துக் கொண்டு நடப்பதும்,
பந்து தட்டிப் போவதும்,
இடித்துக் கொண்டு செல்வதும்,
என்றும் தீங்கு செய்யுமே!


பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf