பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/பாப்பா படி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf

பாப்பா படி


பாப்பா பாப்பா படி!
பாட்டும் கதையும் படி!

அம்மா சுட்டாள் தோசை!
அதன்மேல் இல்லை ஆசை!

பாட்டும் கதையும் வேண்டும்!
படிப்பே அறிவைத் துண்டும்!

விளக்கே இருளைப் போக்கும்!
வெளிச்சம் எங்கும் சேர்க்கும்!

படிப்பே மடமை ஒட்டும்!
பரந்த அறிவைக் கூட்டும்!

பாப்பா பாப்பா படி!
பணிவும் அன்பும் படி!

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf