பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/பூனை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchபூனை


மியாவ் மியாவ் பூனை
மீசைக்காரப் பூனை?
கொட்டுக் காலுப் பூனை
கொள்ளிக் கண்ணுப் பூனை!
எட்டித்தாவி விரைவிலே
எலிபிடிக்கும் பூனை!
பண்டம் உருட்டும் பூனை
பாலைக்குடிக்கும் பூனை!
உண்டு விட்டு அடுப்பிலே
உறக்கம் கொள்ளும் பூனை!
மியாவ் மியாவ் பூனை
மீசைக்காரப் பூனை!


பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf