பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)/மின்சாரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf


மின்சாரம்


விசையைத் தட்டி விட்டதும்
விளக்குப் பற்றிக் கொள்ளுமாம்!
விசையைத் திருப்பி வைத்ததும்
வாய்திறந்து பேசுமாம்!

விசையை முடுக்கி விட்டதும்
விசிறி நன்கு சுழலுமாம்!
விசையைக் காதில் வைத்ததும்
விளம்பும் பேச்சு கேட்குமாம்!

கம்பிக் குள்ளே செல்லுமாம்!
கையில் தொட்டால் கொல்லுமாம்!
தம்பி! அதுபேர் 'மின்சாரம்'
தண்ணீர் தந்த விசையாகும்!

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்).pdf