பாரதிதாசன் பரம்பரை
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
பாரதிதாசன்
பரம்பரை
(‘பொன்னி’யில் வெளிவந்த
47 கவிஞர்களின் கவிதைகள்)
தொகுப்பாசிரியர்:
உவமைக் கவிஞர் சுரதா
சுரதா பதிப்பகம்
56 அ, டாக்டர் இலட்சுமணசாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர்
சென்னை–600 078
நூல் : பாரதிதாசன் பரம்பரை தொகுப்பு : உவமைக் கவிஞர் சுரதா முதற் பதிப்பு : 1993, டிசம்பர் வெளியீடு : சுரதா பதிப்பகம்
கலைஞர் கருணாநிதி நகர்
சென்னை-600 078.
- அச்சிட்டோர் :
மூவேந்தர் அச்சகம்
இராயப்பேட்டை,
சென்னை-600 014.
- அச்சிட்டோர் :
- விலை : ரூ.15–00
படையல்
பாரதிதாசன் பரம்பரையைப்
பாருக்கு அறிமுகப்படுத்திய
‘பொன்னி’ இதழின் ஆசிரியர்
மூதறிஞர்
முருகு சுப்பிரமணியம் அவர்கட்கு
இக்கவிதை நூலைக்
காணிக்கையாக்குகிறேன்!
–சுரதா
23-11-93
பாரதிதாசன் பரம்பரை
1. மு.அண்ணாமலை |
24. வ. செ. குலோத்துங்கன் |
அணிந்துரை
‘பொன்னி’ இதழ் புதுக்கோட்டையிலிருந்து 1947–ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் பவனி வரத் தொடங்கியது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளையும் அவர்தம் இலக்கியச் சிறப்பையும் தமிழுலகத்தில் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்ப முதலே பாவேந்தரின் கவிதையை ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டு வந்தோம். அந்த நாளில் புரட்சிக் கவிஞருக்குத் தமிழகத்தில் அத்துணைப் பெரிய செல்வாக்கு இல்லை. திராவிடர் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் மட்டுமே பாவேந்தரின் புகழ் பரவி இருந்தது. அந்த நிலையை மாற்றித் தமிழ் இலக்கிய உலகம் அனைத்திலும் பாவேந்தரின் பெயரும் அவர் வடித்திருக்கும் கவிதைகளும் பரவ வேண்டுமென்று நாங்கள் ஆசைப்பட்டோம்.
பொன்னி இதழ் தான் வாழ்ந்த ஏழு ஆண்டு காலத்தில் தன்னுடைய இந்த இலட்சியத்தில் நல்ல வெற்றியைக் காண முடிந்தது என்பதே எனது கருத்தாகும்.
பாரதி தாம் வாழ்ந்த காலத்தில் பாரதிதாசனை அறிமுகப்படுத்தும் போது, ‘பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம்’ என்று குறிப்பிட்டார். அதற்கேற்ப பாவேந்தர் தமது பெயரைப் பாரதிதாசன் என வைத்துக் கொண்டு கவிதைகளைப் படைத்து வந்தார். பாரதிக்குப் பிறகு அவருடைய வாரிசாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்ள முன் வந்தவர் பாரதிதாசன் ஒருவர் மட்டுமே என்று சொல்வது சரியாக இருக்கும். ஆனால் பாரதிதாசனுக்கு, அவர் காட்டிய மரபில், அவர் கொள்கை வழி நின்று பாடல் இயற்றக் கூடியவர்கள் ஏராளமாக ஆங்காங்கு தோன்றியிருப்பதை நாங்கள் உணர முடிந்தது. வாழை மரத்தடியில் பல கன்றுகள் குருத்து விடுவது போல அந்த இளங் கவிஞர்களின் கவித்திறன் பாரதிதாசன் பாணியில் ஆற்றலோடு முளைவிடத் தொடங்கி இருப்பதையும் நாங்கள் கண்டோம். பாரதிதாசனின் கவிதா மண்டலம் பாரதியாரின் கவிதா மண்டலத்தைக் காட்டிலும் பன்மடங்கு பரந்துபட்டதாக நாடெங்கும் பரவி நிற்பதையும் நாங்கள் உணர முடிந்தது. வளர்ந்துவரும் இந்த இளங் கவிஞர்களையெல்லாம் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்னும் பொது மகுடமிட்டுப் பொன்னி இதழ்களில் ஏன் அறிமுகப் படுத்தக் கூடாது என்ற எண்ணம் உருவாயிற்று
அப்போது பொன்னி இதழ்களை வெளியிடுவதில் எனக்குத் துணைபுரிந்து வந்தவர்கள் இருவர் கவிஞர்களாக இருந்ததையும் அவர்கள் என் எண்ணத்திற்குக் கண் கூடான சான்றாகத் திகழ்ந்தார்கள் என்பதையும் குறிப்பிடுவது மிக அவசியமாகும், நாரா. நாச்சியப்பன், மு. அண்ணாமலை ஆகிய அந்த இரண்டு இளங்கவிஞர்களும் பாரதிதாசன் பரம்பரையில் முன் வரிசையைப் பிடித்துக் கொண்டதில் வியப்பேதும் இல்லை.
அந்த நாளில்—அதாவது ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்கு முன்பு—பாரதிதாசன் பரம்பரையில் அறிமுகமாகி இன்று தம் பெயருக்கு ஏற்ப பாவேந்தரின் தலை மாணாக்கராகவும் தமிழக அரசின் பாவேந்தர் விருதினைப் பெற்றிருக்கும் முதல் கவிஞராகவும் திகழ்பவர் உவமைக் கவிஞர்—புலமைக்கரசு சுரதா. அவருடைய மலேசிய வருகை, பொன்னி வளர்த்த பாரதிதாசன் பரம்பரையை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கும், எண்ணியெண்ணி மகிழ்வதற்கும் ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது.
கவிஞர் சுரதாவுக்கும் எனக்கும் பரிச்சயம் ஏற்படுவதற்குப் பாவேந்தர் பாரதிதாசனே காரணமாக இருந்தார். 1943–ஆம் ஆண்டு சென்னையில் ‘முத்தமிழ் நிலையம்’ என்னும் பெயரில் ஒரு கலைப் படைப்பு நிலையத்தைப் பாவேந்தருக்காக நிறுவி இருந்தோம். பாரதிதாசன் எண்ணங்களை இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வாயிலாகவும் நாடெங்கும் மேடை ஏற்றுவது எங்கள் திட்டம். அங்கே பாரதிதாசன் ஆணைக்கு இணங்கக் கலைஞராகப் பணியாற்ற வந்தவர் கவிஞர் சுரதா, அப்பொழுது எங்களிடையே மலர்ந்த நட்பு கோப்பெருஞ் சோழன்—பிசிராந்தையார் நட்பைப்போல நாளும் தழைத்து வந்தது. அதன் பிறகு காலத்தின் சுழற்சியில் நான் மலேசிய நாட்டுக்கு வந்து விட்டேன். சுரதா தமிழகத்தில் கவி உலகத்தில் கோலோச்சி வந்தார். இடையில் ஓடிய 26 ஆண்டுகளும் நாடுகளின் மாற்றமும் இடையில் உள்ள 1,500 மைல் தொலைவும் எங்கள் நட்பைச் சிதைக்க முடியவில்லை என்பதைச் சுரதாவின் வருகையும் அவருடைய இனிய—எளிய பண்புகளும் எனக்கு மெய்ப்பித்தன.
இங்கு வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி, பாரதிதாசன் பரம்பரையைப் பற்றித்தான். நல்ல வேளையாகக் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்த போது பொன்னி தொகுதிகளையும் ‘பைண்டு’ செய்து கையோடு கொண்டு வந்திருந்தேன். அதனால் அவருடைய கேள்விகளுக்கு அதிகம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. பொன்னி தொகுதிகளை அவரிடம் ஒப்படைத்து விட்டேன். இந்நாட்டில் அவர் தங்கிய இரண்டு மாத காலத்தில் பொன்னி இதழ்களைப் புரட்டி அவற்றில் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்னும் மகுடத்தின் கீழ் அறிமுகமாகியிருக்கும் 47 இளங் கவிஞர்களையும் அவர்களின் பாடல்களையும் கண்டுபிடித்து அவற்றை எல்லாம் தாமே படி எடுத்துப் பத்திரமாகச் சேர்த்து வைத்துக் கொண்டார். அதுமட்டுமன்றி தாம் செல்லும் இடமெல்லாம் பேசுகின்ற மேடைகளில் எல்லாம் பொன்னி உருவாக்கிய பாரதிதாசன் பரம்பரையைப் பற்றிக் குறிப்பிடத் தவறுவதே இல்லை.இந்த 47 கவிஞர்களில் இன்று புகழ் மிக்கக் கவிஞர்களாக விளங்குபவர்கள் பலர் உண்டு. மற்றத் துறைகளில் பெயர் பொறித்து நிற்பவர்களும் உண்டு. அன்று குடத்து விளக்காக இருந்த இந்தக் கவிஞர் கூட்டத்தைக் குன்றிலிட்ட தீபமாக ஏற்றி வைக்கின்ற வாய்ப்பு பொன்னிக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டியது பெரும் பேறாகும்.
கவிஞர் சுரதா தமது ஆசானாகிய பாவேந்தரிடம் மட்டற்ற ஈடுபாடும் மதிப்பும் கொண்டவர், பாவேந்தரின் பெருமையினை நாளும் பரப்பி வருகின்றவர். பாவேந்தரின் கவிதைப் பணியை அவருடைய வழியில் நின்று சரியாகச் செய்து வருகின்றவர். ‘பாரதிதாசன் பரம்பரை’ என்னும் இந்நூலை முறையாகத் தமிழகத்திற்குப் படைத்திருப்பதன் மூலம் கவிஞர் சுரதா பாவேந்தரிடத்தும், பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த தமது சகோதரக் கவிஞர்களிடத்தும், அதற்கெல்லாம் மேலாகக் கவிதை உலகத்தின் பாலும் அவர் கொண்டிருக்கும் பேரார்வம் நன்கு புலனாகிறது. பாரதிதாசன் வழியில் இன்று தலை தூக்கி வரும் இளங் கவிஞர்களை எல்லாம் ஊக்கப்படுத்தித் தமக்குப் பின் ஒரு புதிய பரம்பரையை உருவாக்கிக் கொண்டிருக்கும் கவிஞர் சுரதாவின் பரந்த உள்ளத்திற்கு இந்த நூல் தக்க சான்றாகும்.
| கோலாலம்பூர் | முருகு சுப்பிரமணியன் | ||||
| 27–7–1979 | |||||
முகம் காட்டும் முன்னுரை
அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர்கள் நாகநாடு சென்று இனிக்கும் கரும்பைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தனர்.
சுரிகாற் பெருவளத்தான் காலத்தில் சாரமா முனிவன் மணக்கும் செவ்வத்திப் பூவைக் கொண்டு வந்தான்.
சூரவாதித்தன் என்பான் நாகநாட்டிலிருந்து சுவைக்கும் வெற்றிலைக் கொடியைக் கொண்டுவந்தான்.
ஔவையாராலேயே பந்தானந்தாதி பாடப்பட்ட பந்தன் எனும் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன், நாகநாடு சென்று ஆயுள் வளர்க்கும் அருநெல்லிக் கனியாம் கரு நெல்லிக் கனியைக் கொண்டுவந்தான்!
இப்படி, வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அந்தந்த நாட்டு உணவுப் பொருட்களையும் உல்லாசப் பொருட்களையுமே தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்தனர்.
ஆனால் நானோ–1979ல் கவியரசர் அன்பானந்தனின் கவிதை நூலை வெளியிடுவதற்காக மலேசிய நாட்டிற்குச் சென்று பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களின் பட்டியலையும் பொன்னி இதழிலிருந்து அவர்தம் படைப்புகளையும் கொண்டுவந்தேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்பல்லவா?
இனிமேல் வெளிநாடுகளுக்குச் செல்கிற எல்லோரும், என்னைப் பின் பற்றி சிந்தனைகளைத் திரட்டி வந்து தமிழ் நாட்டில் பரப்பவேண்டுமென்பது என்னுடைய ஆசை!
எனதாசான் பாவேந்தரின் புகழ் நிலைக்க எத்தனையோ நான் செய்திருந்தாலும் இந்நூலையே நான் செய்தவற்றிலெல்லாம் தலையாய ஒன்றாகக் கருதுகிறேன்.
நாயன்மார்கள் வரலாறு 63 பேருடன் முடிந்துவிட்டது.
ஆழ்வார்கள் வரலாறு 12 பேருடன் முற்றுப் பெற்றுவிட்டது.
பாவேந்தரின் பரம்பரை 47 பாவலர்களுடன் நின்று விடவில்லை. நீண்டு கொண்டே இருப்பது என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
வளரட்டும் பாவேந்தர் பரம்பரை!
மலரட்டும் தமிழ்க்கவிதைத் தலைமுறை!
| 56அ, டாக்டர் இலட்சுமணசாமி சாலை, | அன்பன் | ||||
| கலைஞர் கருணாநிதி நகர், சென்னை—600078 தொலைபேசி: 428508 | |||||
உள்ளடக்கம்
- பாரதிதாசன் பரம்பரை/001
- பாரதிதாசன் பரம்பரை/002
- பாரதிதாசன் பரம்பரை/003
- பாரதிதாசன் பரம்பரை/004
- பாரதிதாசன் பரம்பரை/005
- பாரதிதாசன் பரம்பரை/006
- பாரதிதாசன் பரம்பரை/007
- பாரதிதாசன் பரம்பரை/008
- பாரதிதாசன் பரம்பரை/009
- பாரதிதாசன் பரம்பரை/010
- பாரதிதாசன் பரம்பரை/011
- பாரதிதாசன் பரம்பரை/012
- பாரதிதாசன் பரம்பரை/013
- பாரதிதாசன் பரம்பரை/014
- பாரதிதாசன் பரம்பரை/015
- பாரதிதாசன் பரம்பரை/016
- பாரதிதாசன் பரம்பரை/017
- பாரதிதாசன் பரம்பரை/018
- பாரதிதாசன் பரம்பரை/019
- பாரதிதாசன் பரம்பரை/020
- பாரதிதாசன் பரம்பரை/021
- பாரதிதாசன் பரம்பரை/022
- பாரதிதாசன் பரம்பரை/023
- பாரதிதாசன் பரம்பரை/024
- பாரதிதாசன் பரம்பரை/025
- பாரதிதாசன் பரம்பரை/026
- பாரதிதாசன் பரம்பரை/027
- பாரதிதாசன் பரம்பரை/028
- பாரதிதாசன் பரம்பரை/029
- பாரதிதாசன் பரம்பரை/030
- பாரதிதாசன் பரம்பரை/031
- பாரதிதாசன் பரம்பரை/032
- பாரதிதாசன் பரம்பரை/033
- பாரதிதாசன் பரம்பரை/034
- பாரதிதாசன் பரம்பரை/035
- பாரதிதாசன் பரம்பரை/036
- பாரதிதாசன் பரம்பரை/037
- பாரதிதாசன் பரம்பரை/038
- பாரதிதாசன் பரம்பரை/039
- பாரதிதாசன் பரம்பரை/040
- பாரதிதாசன் பரம்பரை/041
- பாரதிதாசன் பரம்பரை/042
- பாரதிதாசன் பரம்பரை/043
- பாரதிதாசன் பரம்பரை/044
- பாரதிதாசன் பரம்பரை/045
- பாரதிதாசன் பரம்பரை/046
- பாரதிதாசன் பரம்பரை/047
- பாரதிதாசன் பரம்பரை/048
