உள்ளடக்கத்துக்குச் செல்

பாவேந்தரின் காளமேகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.

***

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

பாவேந்தரின்
காளமேகம்

உவமைக் கவிஞர் சுரதா

சேகர் பதிப்பகம்
66/1, பெரியார் தெரு,
எம். ஜி. ஆர். நகர்,
சென்னை-600 078,
(போன் : 4834325)


பாவேந்தர் பாரதிதாசனார்
106ஆவது ஆண்டு பிறந்த நாள்
29-1-1997 வெளியீடு


பாவேந்தர் பாரதிதாசனார்
நினைவு அருங்காட்சியகம்
115, பெருமாள் கோயில் தெரு,
புதுச்சேரி – 605 001.


விலை ரூ. 6–00


அச்சிட்டோர்:
சதுர்வேந்தன் அச்சகம்
கோடம்பாக்கம், சென்னை-24.

பதிப்புரை

ஒரு பதச்சோறு!

முறையாகத் தமிழ் பயின்று தேர்ந்த முத்தமிழ் வித்தகர்களே தமிழ்த் திரைப்படங்களின் தொடக்க காலத்தில் கொடிகட்டிப் பறந்தனர். அறுபதாண்டுகளுக்கு முன் ஆற்றல் மிக்க எழுத்தாளர், சமுதாயப் பொறுப்புணர்ச்சியோடு கலையுலகில் சாதனை புரிந்துள்ளனர் பாடலாசிரியர்களோ அறுநூறு பேர் தீமையிலிருந்து கரையேறி தன்மை பெறவும், கேடுகள் அழித்து பண்பாடு தலை நிமிர்ந்து வெற்றி பெறவும் மக்கள் பாடம் பெறத்தக்க வகையில் கதைகளைக் கண்டனர்; உரையாடல் தந்தனர்; இதயத்தை இசைய வைக்கும் பொருத்தமான நல்லிசையால் சிறு சிறு பாடல்களை எழுதி மக்களை மகிழ்வித்தனர்.

தோரணங்கள் வரிசையிட்டுத் தொங்கும் விழாப் பந்தலெனத் தமிழ்ப்படங்கள் அக்காலத்தில் வெளி வந்தன. ஒரு படத்தில் அறுபத்திரண்டு பாடல்கள்! எண்ணிக்கை குறையத் தொடங்கிய முறையிலேயே ஒரு வரலாறு பதிவாகிறது. பத்துப் பன்னிரண்டு இசைக் கருவிகளே பயன்படுத்தப் பெற்றுள்ளன

தமிழ்ப் புலவர்களில் தனியிடம் பெற்றவர் கவிஞர் காளமேகம். அவர் கதை பற்றிய தமிழ்த் திரைப்படத்திற்குத் தமிழ்ப்புலவரான பாவேந்தர் பாரதிதாசன் உரையாடல், பாடல் எழுதினார். 1940இல் உருவான காளமேகம் தமிழ்ப் படத்தில் 2 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள ஒருபாடலைக் கல்வெட்





டாக்கிப் பாவேந்தர் நினைவாகப் பதிக்கும் முயற்சியும் உருவாகியுள்ளது.

இப்படத்தில் கலையுலக வரலாற்றுச் சிறப்புகள் உள்ளதை இப்படப் பாடல் புத்தகத்தின் வாயிலாக அறியலாம்.

படத்தை இயக்கியவர், பல வெற்றித் தமிழ்ப் படங்களை உருவாக்கிய ஐரோப்பிய இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன். அகில இந்தியப் புகழ் நாதசுர வித்துவான், திருவாவடுதுறை ஆதீன வித்துவான், நாதசுர சக்கரவர்த்தி டி. என். இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் கவிகாளமேகமாக நடித்துள்ளார்.

துணை இயக்குநர் பி. எஸ். செட்டியார். இவரே பிற்காலத்தில் ‘சினிமா உலகம்’ என்னும் முதல் சினிமா இதழைத் தொடங்கிச் சிறப்புற நடத்தியவர். சீர்காழி கோவிந்தராசன் அவர்களின் சிறிய தந்தையார். மேலும் இப்படத்தில் பணிபுரிந்த வேணுகோபால சர்மா அவர்களின் பிற்காலச் சாதனையே இன்று நாம் காணும் திருவள்ளுவர் திருஉருவப் படம்.

புரட்சிக் கவிஞரின் முதல் தமிழ்த் திரைப்படம் காளமேகம். அதன் பாட்டுப் புத்தகத்தில் புதுவை பாரதிதாசன் என்று காணப்படுகிறது. ஒரு கவிஞரின் கதைக்கு மற்றொரு கவிஞர் உரையாடல், பாடல் எழுதியது சிறப்புக்குரியதுதானே!

அவர் போன்றே அவர்தம் வழிவந்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் ஏழிசை மன்னர் டி. கே. தியாகராஜபாகவதர் நடித்த அமரகவி எனும் படத்திற்கு உரையாடல், பாடல் வரைந்து புகழ் பெற்றார்.

அடுத்து வந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அம்பிகாபதி என்னும் கவிஞனின் கதைக்கு உரையாடலும் பாடலும் எழுதி புகழடைந்தார். பின்னர் கவிஞராகவே நடித்தும் காட்டினார்.

1940இல் உருவான காளமேகம் திரைப்படப் பாடல் புத்தகத்தை அடைகாத்து வைத்திருந்து, பாவேந்தரின் 106 ஆவது ஆண்டு பிறந்தநாளில் வெளியிடுங்கள் என்று அன்புடன் தந்தார் வரலாற்றுக் களஞ்சியம், சுரதா அவர்கள். அத்துடன் கவிஞர்களின் கதைகட்கு உரையும் பாடலும் வரைந்த கவிஞர்கள், புலவர்கள் குறிப்போடு திரைப்படங்களின் பட்டியலையும் தொகுத்தளித்தார்.

‘இவ்வகையில், மற்ற பல கவிஞர்கள் தொடர்புடைய கலை, திரைப்பட வரலாற்றுச் செய்திகளும் தொடர்ந்து நூலாக வெளிவர வேண்டும்’ என்ற விருப்பத்தையும் தெரிவித்தார், விரிந்த நெஞ்சினராம் நம் சுரதா அவர்கள். உடல்நலமின்றி ஓய்விலிருந்தபோதிலும் தன் ஆசான் பற்றிய முதல் திரைப்படப் பாடல் புத்தகம் தக்க சமயத்தில் வெளிப்படுத்திட விரும்பி, புதையலிலிருந்து பேர்த்தெடுத்தளித்த அவரது பெருந்தகைமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாக்குகிறேன்.

நூலில் புரட்சிக் கவிஞரின் திரைப் பாடல்களுடன் மணிவாசகரின் பாடலும், காளமேகப் புலவரின் பாடலும் கலந்துள்ளதைக் கண்டு கொள்க.

தமிழ்மொழி நடை, கலையுலக நிலையின் போக்கு, வளர்ச்சி, சமய, சமுதாய மாற்றம் முதலியவற்றை ஆய்வோர்கட்கும் இச்சிறு நூல் ஒளிகாட்டி உதவும். பாவேந்தர் பட அனுபவம் பற்றிய ஒரு கருத்துக் கடிதமும் இதில் அடங்கியுள்ளது அரிய கலைஞர்கள் பலர் பற்றிய குறிப்புகளும் படிப்போர் சிந்தனையைக் கிளறிவிடும்.

தமிழ் ஆர்வலர்கள், சுலையார்வம் மிக்கவர்கள், கவிஞர்கள் முதலியோர் திருக்கரங்களுக்குள் திகழ வேண்டிய சிறந்த நூல் இது.

—வெள்ளையாம்பட்டு சுந்தரம்


உள்ளடக்கம்

  1. பாவேந்தரின் காளமேகம்/001
  2. பாவேந்தரின் காளமேகம்/002
  3. பாவேந்தரின் காளமேகம்/003
  4. பாவேந்தரின் காளமேகம்/004
  5. பாவேந்தரின் காளமேகம்/005
"https://ta.wikisource.org/w/index.php?title=பாவேந்தரின்_காளமேகம்&oldid=1872097" இலிருந்து மீள்விக்கப்பட்டது